தென்மேற்கு பகுதியில் ஏன் தலைவாசல் வைக்க கூடாது?

தென்மேற்கு தலைவாசல்
தென்மேற்கு தலைவாசல்

தென்மேற்கு தலைவாசல்

இளங்காலை வெயில் மனிதனின் உடல்நிலைக்கு உகந்தது ஆகும்.அதானாலேயே முடிந்தவரை வாஸ்து அமைப்பில் கிழக்கு அல்லது வடக்கு பாகத்தில் வீட்டின் வாயில் இருப்பது சிறப்பு என்று சொல்லுகின்றது.மேலும் அதிக காலி இடங்கள் வடக்கிலும்,கிழக்கிலும்,இருக்க வேண்டும்.தெற்கிலும் மேற்கிலும் மனிதர்கள் நடமாட்டம் குறைவாக இருப்பது சிறப்பு.

 அதேபோல மேற்கிலும், தெற்கிலும், உயர்ந்த மரங்களை வைக்கும் போது தென்மேற்கு ஆற்றல் மட்டுப்படுத்தப்படும்.

பூமியில் வடகிழக்கு பருவகாற்று மற்றும் தென்மேற்கு பருவகாற்று என்ற இருபருவ காற்றுகள் வீசுகின்றன.அந்தவகையில் வடகிழக்கில் இருந்து வரும் வடகிழக்கு பருவக்காற்று மனிதனுக்கு நன்மையை தருகின்ற காற்றாக உள்ளது. அதனாலேயே வடகிழக்கில் இருந்து வருகின்ற காற்றினை வீட்டில் நுழைய விடுவதற்காக,அதிக திறப்புகளும்,அதிக இடங்களும் இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.இதற்காகவே தெற்கு பகுதி மேற்கு பகுதி ஆகிய இரண்டு திசைகளை விட வடக்கும், கிழக்கும் அதிக எண்ணிக்கையில் ஜன்னல்கள் வேண்டும் என்றும்,மிகமுக்கியமாக வடக்கு சார்ந்த வடகிழக்கு, கிழக்கு சார்ந்த வடகிழக்கு ஆகிய இடங்களில் வருடத்தில் 365 நாட்களும்,சாளரங்களை திறந்து வைக்க வேண்டும் என்றும், அதே வடகிழக்கு வாயில் நிலவுகளின் மேல் திறப்புக்கள் அமைக்க வேண்டும் அதுவே, ஒரு மனிதனுக்கு எப்படி மூக்கு உள்ளதோ,அது போல வீட்டிற்கு அது மூக்கின் அமைப்பு ஆகும்.
ஆக தென்மேற்கில் இருந்து வீசக்கூடிய காற்று வாடைக்காற்று   என்று அழைக்கப்படுகிறது. இந்த காற்று ஒரு மனிதன் மேல் படும் போது அவனுடைய ஆரோக்கியம் கெட்டு விடும்.அதனாலேயே மேற்கு புறங்களில் குறைந்த திறப்புகளை நமது முன்னோர் ஏற்படுத்தினர்.

south west door facing
south west door facing

ஒவ்வொரு மனிதனும் பூமி சுத்துகின்ற அமைப்பை ஒத்துப்போகும் விதத்தில் வீட்டினை அமைக்கும் போது, ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் தன்மை ஏற்படும். இதனால் அங்கு வசிக்கும் போது சிறப்பானதொரு வாழ்வு ஒரு வாஸ்து அமைப்புள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கு கிடைக்கும். தென் மேற்கு பருவ காற்றின் தாக்கம் உணர வேண்டும் என்றால் இன்றைய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரை சுற்றி 25 ,கிலோமீட்டர்  இந்த காற்றின் காரணமாக பெரிய அளவில் விவசாயம் சிறப்பாக இல்லை. அப்படியே இருந்தாலும்,பெரிய அளவில் விளைச்சல் கிடையாது. அதன் தாக்கம் கண்கூடாக தெரிகிறது. ஆக  மற்ற பகுதிகளில் இருக்கும் மக்களை விட தாராபுரம் மற்றும் கன்யாகுமரி, ராமநாதபுரம்,தூத்துக்குடி, நாகை மாவட்டங்களின் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகப் பெரிய அரணாக தென்மேற்கு தடுத்த அமைப்பில் வீடுகட்டும் போது நல்ல அற்புதமான வாழ்வு வாழ முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

south west house
south west house