எட்டு திசைகளில் தெற்கு பகுதிக்கு வாஸ்து.

 தெற்கு பகுதிக்கு வாஸ்து.

vaasthu tamilnadu
vaasthu tamilnadu

 

 

 

 

 

 

ஒரு இல்லத்தில் தெற்கு திசை என்பது மிகமுக்கியமான இடத்தை வகிக்கிறது. ஏனென்றால் ஒரு மனிதனின் தைரியம் என்பது இருந்தால் மட்டுமே வாழ்வில் அனைத்து விதமான வெற்றி எனபது உறுதியாகும். அந்தவகையில் கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் இடமாக நமது சாஸ்திரம் கூறுகிறது. ஆக செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக நமது தமிழ்கடவுளான முருகப்பெருமான் விளங்குகிறார். அவரின் கையில் எப்பொழுதும் வெற்றிக்கு அறிகுறியாக வேல் என்பது இருக்கும்.

எமனுக்கு உரிய திசையான தெற்கு திசையை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய பாதிப்புகளை ஒரு இல்லத்திற்கு வழங்கி விடும். இங்கு குடும்பத்தில் இரண்டாவது வாரிசுகள் அது ஆண் மற்றும் பெண்களாக இருந்தாலும் தங்குவது நல்லது.இந்தபகுதியை பூஜை அறைக்கு மற்றும் மாடிப்படிகளில் உள்படியாக இந்த இடத்தினை உபயோகித்து கொள்ளலாம். இங்கு அறைகள் இருக்கும் போது மொத்த அறைக்கு வடகிழக்கு மற்றும் வடமேற்கு மேற்கு பகுதியில் தலைவாயிலை அமைத்து கொள்வது நல்லது.
எக்காரணம் கொண்டும் இங்கு பள்ளங்கள் மற்றும் தென்மேற்கு பகுதியை விட உயரமான அமைப்பாக அமைக்க கூடாது. ஒருசில இடங்களில் இங்கு தலைவாயில் வைப்பார்கள். அதனால் எவ்விதமான தவறுகளும் கிடையாது. ஆனால் உள் அறைகளுக்கு அந்த தலைவாயில் தவறான வாயிலாக அமைந்து விடக்கூடாது. தெற்கு திசையில் சரியாக வாஸ்து விதிகளுக்கு பொறுந்தி இருக்கும் இல்லங்களில் இருக்கும் நபர்களே சாதனை புரியும் தைரியசாலிகளாக இருப்பார்கள் இதனை எனது வாஸ்து பயணத்தில் உணர்ந்திருக்கிறேன். காவல்துறை மற்றும் ராணுவம் சார்ந்த பணிகளில் இருபவர்கள் இந்த திசையை மிகச்சிறந்த வாஸ்து அமைப்பில் வைத்திருக்கும் போது கண்டிப்பாக உயர் பதவிகள் இவர்களை தேடிவரும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.