சித்தப்பிரமை காரணமும் வாஸ்து சாஸ்திரமும்

சித்த பிரமை நோய்

சித்த பிரமை  நோய்ஒரு மனிதனுக்கு சித்தப்பிரமை என்பது ஒரு தாற்காலிகமான, ஆனால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய தீவிரமான மனநிலை சார்ந்த நோய் ஆகும். இப்படிப்  பட்ட நிலையில் உள்ளவர்களுடைய மனத்தின் எண்ணத்தில் மற்றும் தெளிவான புத்தியில் ஏற்படும் தீவிரமான மாறுபாடுகள் ஆகும். இப்படிப்பட்ட நிலையில் உள்ள மக்கள் தங்களைச் சூழ்ந்து நடக்கும் விஷயங்கள் என்னவென்றே புரியாமல் இருப்பார்கள்.சிந்திக்க தெரியாது குழப்பமடைவார்கள். சித்தப்பிரமை என்பது பொதுவாகத் திடீரென்று ஏற்படுகிறது,இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் சில மணி நேரங்களுக்குள் அல்லது சில நாள்களுக்குள் குறிப்பிடத்தக்க வித்தியாசங்களைக் காணலாம்.  இதற்கு மருத்துவம் ஒரு பக்கம் பார்த்தாலும் ஒரு குடியிருக்கும் வீட்டின் அமைப்பையும் சரிபார்த்து கொள்வது அந்த நோயில் இருந்து விடுபட துணைபுரியும்.

 

இந்த காலக் கட்டத்தில் பாதிக்கப்பட்ட நபருடைய மனத்தின் நிலைத் தன்மையில் ஒரு தடுமாற்றம் காணப்படும். சில நேரங்களில் அவர்களிடம் இதற்கான அறிகுறிகள் காணப்படலாம், மற்ற நேரங்களில் அவர்கள் சாதாரணமாக இருக்கலாம்.சூழலைப் பற்றிய விழிப்புணர்வு குறைதல்.முக்கியமல்லாத விஷயங்களால் எளிதில் கவனம் சிதறுதல்.ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவனம் செலுத்த இயலாமல் இருத்தல்.எதிலும் ஆர்வமில்லாமல் இருத்தல் அல்லது தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்களுக்குப் போதுமான அளவில் எதிர்வினை ஆற்றாமல், எதையும் கண்டுகொள்ளாமல்  இருத்தல் உரையாடலின் போது, அல்லது யாராவது இவர்களிடம் ஏதேனும் கேள்விகளைக் கேட்டால் பதில் பேச இயலாமல்  இருத்தல்மோசமான சிந்தனைத் திறன்கள் ,மோசமான ஞாபக சக்தி, குறிப்பாகச் குறிகிய காலத்தின் சம்பவங்களையே மறந்து விடுதல், ஒழுங்கின்மை, நான் யார் நான் எங்கே இருக்கின்றேன்.இன்று என்ன தேதி மற்றும் இன்றைய கிழமை என்ன  போன்றவற்றை உணரும் ஆற்றல் குறைந்து விடுதல்,பேசுவதில்,  வார்த்தைகளை நினைவுக்குக் கொண்டுவருதலில் சிக்கல் அதாவது தடுமாற்றத்தோடு உளருவது,அல்லது அர்த்தமில்லாது  பேசுதல்,மற்றும் படித்தல்,மற்றும் வாசித்தல்,பழக்கவழக்கங்களில் மாற்றங்கள்,நிஜத்தில் இல்லாத விஷயங்களைக் காணுதல்,

 

அமைதியின்றி இருத்தல், பரபரப்பாக இருத்தல், எரிச்சலுடன் அல்லது மோதல் மனப்பான்மையுடன் காணப்படுதல்,எப்போதும் தூக்கக் கலக்கமாக உணர்தல், தூக்கம் சரியாக இல்லாமல் இருத்தல்,மனநிலை மாற்றங்கள் அல்லது தீவிரமான உணர்வுகளுடன் இருத்தல்,பயம், பதற்றம் அல்லது கோபம் போன்றவை சித்தபிரமையின் குணங்களாக சொல்லலாம்.உங்கள்  உறவினர் அல்லது நண்பர் ஒருவருக்கு சித்தப்பிரமைக்கான அறிகுறிகள் போன்று காணப்பட்டால் உடனடியாக ஒரு  மனநல மருத்துவர் சந்திப்பு அவசியம்.சித்தபிரமையின்  அறிகுறிகளை  பொதுவான சிந்திக்கும் பாணி, தினசரிப் பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றை நீங்கள் எந்த அளவு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது அன்பு செலுத்துகின்றிர்களோ, கவனிக்கிறீர்களோ, அந்த அளவு இந்தப் பிரச்னையைக் கண்டறிவது எளிதாகும்.

paranoid personality disorder causes
paranoid personality disorder causes

தொடர்ந்து நாள்பட்ட ஒரு நோயால் பாதிக்கப்படுதல்,அல்லது ஒரு நோய்க்காக மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், நோய்த் தொற்று காரணமாக அல்லது, சிறுநீர்க் குழாய் நோய்த் தொற்று அல்லது தோல் நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொண்ட காரணமாகவோ, மற்றும்  நிமோனியா காய்ச்சல், போதை மருந்துகள் அல்லது மது, மற்றும் போதைப் பொருள்களை அதிகமாகப் பயன்படுத்துதல், அல்லது அவைகள்  கிடைக்காது  சிரமப்பட்டு எரிச்சல் அடைவது, பார்க்கின்சன்ஸ் நோய், ஆஸ்துமா போன்றவற்றைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் சில மருந்துகள் அல்லது தூக்க மருந்துகள் போன்றவை சித்தப்பிரமையை உண்டாக்கலாம். ஆக சித்தபிரமைக்கு கட்டாயமாக மனநல மருத்துவரின் தொடர் கண்காணிப்பு அவசியமாகும். அதனை விடுத்து பேய் விரட்டுதல்,எந்திரம் கட்டுதல் போன்ற செயல்களில் மட்டுமே ஈடுபடுவது தவறு .இந்தச்செயல் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஆங்கில  மனநல மருத்துவரின் கண்காணிப்பில்    இருந்துகொண்டு செய்வது சிறந்த செயல்.இப்படிப்பட்ட நோய் ஒரு குடும்பத்தில் இல்லாமல் இருக்க வேண்டும் என்றாலே வடமேற்கு மிகச்சரியான அமைப்பில் இருக்க வேண்டும்.. அப்படி அல்லாது நோய் வந்த பிறகு சித்தபிரமை நோய் நீங்க வடமேற்கு வாஸ்து திருத்தம் அவசியமாகும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)