தமிழர் எப்படி வீட்டின் அமைப்போடு வாழ்ந்தார்கள்?

முன்னோர்கள்
முன்னோர்கள்

தமிழ் பழமொழிகளும் வாஸ்துவும்

நமது பழந்தமிழர் பழமொழிகள் மூலமாகவும்,பாடல்கள் மூலமாகவும், சாஸ்திரங்களை இணைத்து வாழ்ந்து வந்தனர் என்பதற்கு பழமொழிகளே சான்று.

பாடல்களே இன்றும் நமக்கு சாஸ்திரங்களாக இருக்கின்றது.ஒரு வீடு கட்டும்போது நாள்,நட்சத்திரம், திசைகள், இடங்கள்,அறிந்துதான் வாழ்ந்து உள்ளனர். இதன் தாக்கம் பெரிதாக இல்லாத நிலைக்கு காரணம் வீடு என்பது தலைமுறைகள் கடந்தவிசயமாக போய்விடுவதால் அடுத்த தலைமுறைக்கு ஒருசில சாஸ்திர சம்பரதாயங்கள் மறந்து விடுகிறார்கள்.இதில் வாஸ்துவும் ஒன்று.

வீடுகட்டும் போது நமது முன்னோர் ஜாதகம் பார்த்து செய்வது, வாஸ்து மனையடி ஆயாதி குழிகணக்கு அறிந்த சாஸ்திரகாரனை கூடவைத்து செய்வது என்பது இருந்துள்ளது தொன்றுதொட்டே,அத்தகைய பழக்க வழக்கங்களின் பழமொழிகள் உங்கள் பார்வைக்கு,

சாஸ்திரம் பாராதவீடு.

சமுத்திரம் பார்த்த வீடு தரித்தரம்,

சிறுகக் கட்டி பெறுக வாழ்,

முதற்கோணல் முற்றும் கோணல்,

பச்சமண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா,

கட்டினவனுக்கு ஒரு வுடு கட்டாதவனுக்கு ஊரெங்கும் வீடு,

கிடக்கிறது ஒட்டுதிண்ணை கனவுகாண்கிறது மச்சுவீடு,

வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் செய்துபார்,

வீடு அசையாமல் தின்னும்,யானை அசைந்து தின்னும்,

வீட்டில் குளவி கூடு கட்டினால் பிறப்பு

நாய் பள்ளம் தோண்டினால் இறப்பு,

வீட்டிற்கு தேவை ஒரு வாசப்படி பூட்டுக்கு தேவை ஒத்தசாவி,

அழுகுற வீட்டில் இருந்தாலும் ஒழுகுற வீட்டில் இருக்கக்கூடாது,

சுகுணசுந்தரி இல்லாத வீடு சுடுகாடு
நாடு சுற்றினாலும் வீடு வந்துசேர வேண்டும்.
அரசன் இல்லாத நாடு புருசன் இல்லாத வீடு,
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டு காரனுக்கு இரைச்சல் லாபம்.
அண்டை வீட்டுகாரனும் பிட்டத்து சிரங்கும் ஆகாது,
இல்லை என்கிற வீட்டில் பல்லியும் சேராது.
சிந்தின வீட்டில் சேராது மங்கின வீட்டில் வாராது.
அருமை இல்லாத வீட்டில் எருமையும் குடியிராது.

தமிழர்களின் பழமொழி திசைகள் பற்றி, வடக்கே உறக்கிணறு,வாசலிலே பால்கிணறு.
வடக்கு பார்த்த மச்சுவீட்டை காட்டிலும்,தெற்கு பார்த்த தின்னை நல்லது.
வாராத வாழ்வு வந்தாலும், வடக்கில் தலை வைக்காதே,
மரங்கள் பற்றிய செய்திகள் நமது பழந்தமிழர் பழமொழி அமைப்பில் பாடல்களாக கூறியுள்ளனர் அதுபற்றிய விளக்கம்.
வாசலிலே வள்ளிமரம் வம்முசமோ ராசகுலம்,
மாமரத்தை வெட்டி மச்சுவீடு கட்டி
பச்சை இலுப்பை வெட்டி
பண்டாரமோ பழனியில் வீடுகட்டி
பழனியில் வீடு கட்டி பழகுது எக்காலம்,
காய்ந்த இலுப்பை வெட்டி
காசியில் வீடுகட்டி
காசியில் வீடுகட்டி காணுவது எக்காலம்.
வாழ்கிற வீட்டுக்கு வாழை வைத்துப்பார்.
வீட்டுக்கொடியை வெட்டினால்
வீட்டுப்பெண் வேட்டத்தில் தங்காது.
வீட்டு செல்வம் மாடு
தோட்டச் செல்வம் முருங்கை.
இருட்டு வீட்டுக்குள் முரட்டு ராஜா.

AAMAI puguntha veedu urupudathu

முன்னோர்கள் வீடு
முன்னோர்கள் வீடு

ஆக இப்படிப்பட்ட பழமொழிகள், விடுகதைகள்,தமிழர்களின் வீடு சார்ந்த சாஸ்திர முறைகளை குறிப்பிடுகின்றன.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:

+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

E-mail:
[email protected]

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.

முன்னோர்கள் வீடு சாஸ்திரம்
முன்னோர்கள் வீடு சாஸ்திரம்