வாழ்வில் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு

Vastu solution for all kinds of problems in life
Vastu solution for all kinds of problems in life
இன்றைய வாஸ்து கட்டுரையில் உங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமான இடங்கள் யாவை என்பதனை தெரிந்து கொள்வோம்.
ஆக வாழ்வில் அனைத்து விதமான  பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு  ஒருவரின் வீட்டில் எந்தப்பகுதியில் என்னவிதமான தவறுகள் உள்ளன என்று ஆராய்ந்து 
அந்தப் பகுதியில்  வாஸ்து  சாஸ்திர அமைப்பின் படியும்,ஆயாதி கணித அளவுகளின் படியும் சரி செய்யும் போது வாழ்வில் அம்சமாக வாழ முடியும்.
திருமணம்  நடப்பதில் தாமதம்  ஒரு வீட்டில் ஏற்படுகிறதா?
 உடனே வடமேற்கு பகுதியில் எந்தவிதமான வாஸ்து விதிகளுக்கு இல்லையோ அதனை கவனித்து
 சரிசெய்யும் போது திருமண தடைகள் விலகும்.ஒருவருக்கு திருமணம் நடந்து விட்டது.அதற்குப்பிறகான அவர்களின் அடுத்த தேவை என்பது குழந்தைகள் தான்.அப்படிப்பட்ட குழந்தை பேறில் தடைகள் இருக்கும்போது, ஒரு வீட்டின் வடகிழக்கு பகுதியை கூர்ந்து கவனித்தால் குழந்தை பேறில் உள்ள தடைகளை விலக்க முடியும்.இந்த இடத்தில் வம்சம் வழிவழியாக தொடரவேண்டும் என்றால் ஆயாதி மனை அளவில் அம்ச பொருத்தம் பொருந்தி இருக்க வேண்டும்.
குழந்தைகள் படிப்பில் மந்தமாக இருக்கின்றனரா?
வடகிழக்கு பகுதியில் தனி அறைகளை ஏற்படுத்தி படிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் போது நல்ல அற்புதமான கல்வியை கொடுக்க முடியும்.
ஒரு காலகட்டத்தில் அன்பாக இருக்கும் கணவன் மனைவி இடையே சின்னச்சின்ன பிரச்சனைகள் வந்து அது பெரிய பிரிவினையில் கொண்டு வந்து விடும். ஓரிர இடங்களில் சந்தேகம் சார்ந்த பிரச்சனைகள் கூட  கணவன் மனைவி உறவுகளில்  பாதிப்பினைஏற்படுத்தும்.ஆக கணவன் மனைவி சார்ந்த உறவுகளில்  என்றும் பாதிப்புகள் வரக்கூடாது என்றால் ஓரு வீட்டில் வடமேற்கு மிகச்சரியாக இருக்க வேண்டும்.ஆயாதி மனையடி குழிகணித அமைப்பில் யோனி பொருத்தம் பொருந்தும் அமைப்பாக இருக்க வேண்டும்.
 
 அப்பா மகன்  உறவில் பாதிக்கப்பட்ட சூல்நிலை ஒரு இல்லத்தில் இருக்கிறது என்றாலே தென்மேற்கு பகுதியில் என்னவிதமான பாதிப்புகள் உள்ளனவோ அதனை மிகச்சரியான முறையில் சரி செய்யும் போது  அப்பா மகன் உறவுகளில் எவ்விதமான பிரச்சனைகளும் இருக்காது.இதற்கு துணையாக ஆயாதி குழிகணித அமைப்பில் கர்ப பொருத்தம் சரியாக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் இருக்கும் நபர்கள் பெரிய  விபத்துகளில் சிக்கி கொள்வது , குடும்பத்தில் இருக்கும் நபர்கள் ஆண் மற்றும் பெண்களுக்கு விவாகரத்து சம்பந்தமான வழக்கு பிரச்சனைகள்,மற்றும்
கேன்சர் , கிட்னி சம்பந்தப்பட்ட பல நோய்கள் பாதிக்கப்பட்ட சூல்நிலையில் இருக்கும் போது மீண்டும் அப்படிப்பட்ட பாதிப்புகள் தொடர்ந்து இருக்கக்கூடாது என்றால் ஒரு இல்லத்தில் வடமேற்கு மிகசரியான வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும்.ஆயாதி மனையடி பொருத்தத்தில் விரையம் என்கிற பொருத்தம் சரியான அமைப்பாக இருக்க வேண்டும்.
  வீட்டின் பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் போதை பழக்கம் இருக்கும் நபர்கள் ஒரு இல்லத்தில் இருக்கின்றனர் என்றாலே அது அக்னி சார்ந்த தென்கிழக்கு சம்மந்தப்பட்ட விசயம் ஆகும். அங்கு இருக்கும் தவறுகளை சரிசெய்யும் போது மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
 
 தொழில் முடக்கம் ,
வீண் விரயம் ,
எல்லாம்  இருந்தும் இல்லாத நிலை,
வாழ்க்கையில் விரக்தி ,போன்ற பிரச்னைகள் சார்ந்த பிரச்சனைகள் ஒரு இல்லத்தில் இருக்கிறது என்றாலே அது தென்மேற்கு சார்ந்த பிரச்சனை ஆகும். ஆகவே தென்மேற்கு பகுதியை  வாஸ்து விதிகளுக்கு கொண்டு வரும்போது மேற்கூறிய பிரச்சனைகளுக்கு கட்டாயம் தீர்வு கிடைக்கும்.கூடவே ஆயாதி பொருத்தத்தில் ஆதாயம் அதிக புள்ளிகள் அமைப்பாக இருக்க வேண்டும்.
இது போன்று எண்ணற்ற பிரச்சினைகளை  வாஸ்துவின் ரீதியாகவும், ஆயாதி மனையடி குழிக்கணித அமைப்பிலும் பொருந்தி வரவேண்டும். அப்போது மட்டுமே மனித வாழ்வில் வரக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்த்துக் கொள்ள முடியும்.  

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.