வாஸ்து அமைப்பில் வீட்டில் நேர்மறை ஆற்றல்

வாஸ்து முறையில் பணக்காரர்
வாஸ்து முறையில் பணக்காரர்

 

 

 

 

 

வாஸ்து அமைப்பில்

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி?

 

வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வையுங்கள். நல்ல காற்றோட்டமும் வெயிலும் உள்ளே வருவது எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவதை தடுக்கும், மற்றும் எடுக்கும்.
வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீங்க! அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் காந்தமாகி அவற்றை ஈர்த்து சேர்க்கும்.ஒன்று அப்புற படுத்துங்கள் அல்லது விற்பனை செய்து விடுங்கள்.

வீட்டில் எப்போதும் வெறும் கால்களோட நடக்கப் பழகுங்க! பூமியில் நம் பாதம் பதிவதால் நம்முள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்ளும். இதனால் நம் உடல் ஆற்றலை தக்க வைத்து சமன்படுத்தும்.ஆகவே செருப்பு அணிந்து இருக்க வேண்டாம்.
அந்த காலத்தில் காலணிகளை வெளியேவிட்டுட்டு வீட்டுக்குள் நுழையும் போது கால்களை கழுவி செல்லும் பழக்கம் இருந்தது. அப்படிச் செய்வதால், வெளியே இருந்து நாம் கொண்டு வரும் எதிர்மறை ஆற்றல்களை, வீட்டுக்கு வெளியிலேயே விட்டு சுத்தமாக உள்ளே வந்தார்கள். ஆனால் இன்று இது கடினமான செயலாகி விட்டது. குறைந்தபட்சம் காலணிகளை வாசலில் விட பழகினால், தேவையற்ற எதிர்மறை ஆற்றல்களை வெளியே நிறுத்த முடியும்.

வெளியே வெட்டவெளியில், தோட்டத்தில் தினம் நடைபயிற்சி செய்வது, நேர்மறை ஆற்றல்களை மீண்டும் ஊக்கமளித்து நமக்கு புத்துணர்வை அளிக்கவல்லது.
தரையை பெருக்கித் தள்ளுவதும் எதிர்மறை ஆற்றல்களை அசைத்து குப்பையோடு குப்பையாக வெளியேற்றும்

கல் உப்புக்கும் இந்த சக்தி அபாரம். வீட்டை துடைக்கும் போதோ கழுவும் போதோ, ஒரு கை கல் உப்பை வழியில் போட்டு அந்த நீரை உபயோகிப்பதும் அதிக பலனை தரும்
தொட்டிகளில் செடிகளும் மரங்களும் வீட்டில் வளர்ப்பதும் இந்த எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றும்.கல் உப்பு கரைத்த நீரில் குளித்தாலோ, கை கால்களை அவ்வபோது சற்று நேரம் ஊற வைப்பதாலோ நம் உடலை பற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தலாம்.

தொடர் இறைவழிபாடு மற்றும் இறைப்பதிகங்கள் மற்றும் பிரார்த்தனைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நூறு சதவிகிதம் அதிகப்படுத்தும்.
நமது எண்ணம், செயல், பேச்சு அனைதையும், நாம் நேர்மறையாக வைத்திருக்க வேண்டும். இவை எதிர்மறையாக இருந்தால், எதிர்மறை ஆற்றல்களை அதிகமாக நம்முள் ஈர்த்துவிடும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வீட்டை நன்கு வெளிச்சமாக வைத்திருக்க பழக வேண்டும். வெளிச்சம் எதிர்மறையை நீக்கும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.