வாஸ்து அமைப்பில் தவறான சாலைகள் அவற்றின் நன்மைகளும் தீமைகளும்,

vastu street focus north
vastu street focus north

தவறான சாலைகள்

நாம் வசிக்கும் வீட்டிற்கு வடக்குப் பகுதியில் வரக்கூடிய சாலை அமைப்பு  எப்பொழுதுமே தாழ்ந்த அமைப்பில் இருக்க வேண்டும்.ஆக ஒரு மனை வாங்குகின்றோம் என்றாலே சாலைக்கு சமமாக பார்த்து வாங்க வேண்டும். அப்பொழுது மட்டுமே அந்த மனையின் வழியாக  நன்மைகள் நடக்கும்.வடக்கு புற மனைக்கு உயரமான   சாலை அமைந்துவிட்டால் பல கஷ்டங்களை அதில் வசிப்பவர்களுக்கு கொடுக்கும்.
 வடக்கு பகுதி தாழ்ந்த அமைப்பில் இருக்கும் போது அதனால் பலவித நன்மைகளையும், சௌபாக்கியமாக வாழக்கூடிய பாக்கியத்தை கொடுக்கும். எந்த விசயத்திலும் தலைமையாக இருப்பார்கள்.ஆழ்ந்த உண்மையான பக்தியுடையவர்களாக இருப்பார்கள்.அபிராமி அந்தாதியிலே அபிராமி பட்டர் சொல்வதைப் போல ஒருவரிடமும் இல்லாமை என்று சொல்லி பணத்திற்காக  கையேந்தி நிற்கும் நிலையில் இருக்க மாட்டார்கள். 
  

இதுவே தவறான அமைப்பில் இருக்கும் போது நோய் சார்ந்த விசயங்களில் பாதிப்பு ஏற்படுத்தி

உடல் நலத்தை கெடுக்கும்.  தந்தை மகன் உறவில் பிரித்து வைக்க கூடிய அல்லது சண்டை போட்டு பிரிந்து செல்லக்கூடிய விசயங்களை செய்யும்.  திருமணத்தடை மற்றும் காலம்கடந்த திருமணம் ஏற்படுவது போன்ற விசயங்களிலும் பாதிப்பினை கொடுக்கும்.

அதேபோல ஒரு வீட்டின் கிழக்குப் பகுதியில் பள்ளமானதாக வருவது சிறப்பு. உயரமான அமைப்புகள் இருக்கும் போது அவைகள் மிகப்பெரிய தவறுகளாகி விடும்.அதுவே கிழக்கு பகுதி வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் போது அங்கு வசிக்கும் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.நல்ல உயர்கல்வி கிடைத்து மிகப்பெரிய பதவியான வேலையில் இருக்கும் பாக்கியம் ஏற்படும். மேலும் ஆருசு வேலைகள் கிடைக்கும் அல்லது அரசு வேலைக்கு முயற்சி செய்யும் போது எந்தவிதமான தடைகளும் இல்லாது அரசு வேலை எளிதாக கிடைத்து விடும்.அரசு வேலை அல்லது நிரந்தர வருமானத்தில் என்றும் இருப்பார்கள்.

 

 இதுவே கிழக்கு சாலைகள் உயரமான அமைப்பினை பெற்றிருக்கும் போது பணம் சார்ந்த நிகழ்வுகளில் சிரமம் ஏற்படும். நோய்கள் என்றும் குடியிருக்கும் இல்லமாக இருக்கும். மற்றும் குடும்ப உறவில் குழப்பங்கள் இருந்துகொணாடே இருக்கும். கண் சார்ந்த பிரச்சனைகள் எப்பொழுதும் வீட்டில் உள்ள குடுமாப நபர்களுக்கு இருக்கும்.  குழந்தை பேறு என்பது எட்டா கனியாக இருக்கும். அந்த வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு ஆதிக்கம் என்பது எங்கும் இருக்காது. 

 

வீட்டிற்கு தெற்குப் பகுதியில் வரக்கூடிய ரோடு அமைப்பு எப்பொழுதுமே உயரம் உள்ளதாக இருக்க வேண்டும். அதுவே பல பல நல்ல செயல்களை கொடுக்கும். பள்ளமானதாக இருப்பின் என்றுமே தீமைதான்.அதுவே நன்றாக இருப்பது அரசியல் வாதிகளாக,இராணுவ சார்ந்த துறைகளில் இருப்பவர்களாக,காவல்துறையில் இருப்பவர்களாக,மிகப்பெரியதொழில் அதிபர்களாகவும் இருப்பார்கள்.அதுவே தவறாக இருப்பது,கடன் சுமை என்றுமே இருக்கும்.  அடிக்கடி வேலையில் இடமாற்றம் ஏற்படுத்தும்.என்றுமே எதிரிகளோடு வாழும் நபர்களாக இருப்பார்கள். அவசர புத்தி உள்ளவர்களாக இருப்பார்கள்.

 

இல்லத்தில் மேற்குப் பகுதியில் வரக்கூடிய ரோடு அமைப்பு எப்பொழுதுமே உயரமானதாக வரவேண்டும். அது  பள்ளமான அமைப்பாக வந்துவிட்டால் பல கெடுதல்கள் கொடுக்கும் அமைப்பாகி விடும்.மேற்கு சரியாக இருக்கும் போது அந்த வீட்டில் வசிப்பவர்கள் சமூகத்தில் மிகப்பெரிய   மனிதர்களாக இருப்பார்கள்.

 

vastu street focus
vastu street focus north

கலைநயம் மிக்க வேலைகளை செய்பவர்களாக இருப்பார்கள்.ஊரின்  பிரபலமானவர்களாக இருப்பார்கள்.மேற்கு பகுதியில் தவறான அமைப்பு பலவித தீமைகளை கொடுக்கும். அதாவது
உறவுகளில் பாதிப்பு மற்றும் தொழில் நஷ்டம் பொருள் ஏற்றிச் செல்லும் வாகனம் மூலமாக விபத்து காரணமாக பொருள் நஷ்டம்.கொடுத்த பணம்  வராது ஊரைவிட்டு விரட்டும் அமைப்பை கொடுக்கும்.  அளவிற்கு  அதிகமாக கடன் சுமை மற்றும் திருமணதடை  பெயர் கெடுதல் அதாவது தவறான உறவுகள் மூலமாக தகாத தொடர்புகள் மூலமாக பணவிரயம் ஆகி பெயர் கெடும் அமைப்பை உறுவாக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)