தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வாஸ்து தீர்வு உண்டா?

Sleep-based problem
Sleep-based problem

வாஸ்து விதிகளும் மனித வாழ்வும்,

உலகில்  உள்ள மக்கள் எல்லாருக்குமே அவ்வப்போது தூக்கப் பிரச்னைகள் வருவதுண்டு. என்றைக்காவது ஓர் இரவு அவர்களுக்குத் தூக்கம் சரியாக வராது, அப்படியே வந்தாலும் எதோச்சையாக விழித்துக் கொள்வார்கள், அல்லது கனவு கண்டு தூக்கம் கலைந்துவிடும். இவையெல்லாம் மிகவும் இயல்பான விஷயங்கள். பொதுவாக இதுபோன்ற பிரச்னைகள் ஒரிரு நாள்களில் சரியாகிவிடும்.ஒருசில  சிலருக்கு தூக்கப் பிரச்னைகள்  மாதக் கணக்கில்,  நீடிக்கக்கூடும். அப்போது அது அவர்களுடைய தினசரி வாழ்க்கையைப் கட்டாயமாக பாlதிக்க தொடங்கும்.
 ஒருவருக்கு நீண்டநாள் தூக்கப் பிரச்னைகள் இருந்தால் அவருடைய செயல்பாட்டுத்திறன் குறைந்து சோம்பேறித்தனத்திற்கு வழிவகுக்கும். இதனால் அடிக்கடி அவருடைய மனோநிலை மாறக்கூடிய தன்மையை ஏற்படுத்தும். அவருடைய கவனக்கூர்மை குறையக்கூடும். இந்தநிலையில் உள்ள மக்கள் படிப்பது, வேலை செய்வது, வாகனம் ஓட்டுவது,  போன்ற விசயங்களில் திறன் இல்லாமல் போய்விடுவார்கள்.இவ்வகைப் பிரச்னையால் அவர்களுடைய உறவுகளும் சமூக வாழ்க்கையும் கூட பாதிப்புக்குள்ளாகும்.இது வாஸ்து சாஸ்திர அடிப்படையில் தெற்கு மற்றும் தென்மேற்கு சார்ந்த  வாஸ்து விசயமாக பார்க்கப் படுகிறது.

பகலில் தூக்கக் கலக்கமாகவும்,தினசரி வேலைகளில் கவனம் செலுத்த முடியாமலும் இருப்பது..வண்டி ஓட்டும்போதோ ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும்போதோ தூக்கம் வருதல், அதைக் கட்டுப்படுத்த இயலாமல் திணறுதல் போன்ற பிரச்சனைகளும் வாஸ்து சார்ந்த மனநல பிரச்சனைகள் ஆகும்.இதற்கு காரணமாக வடமேற்கில் உள்ள தவறுகளும் தென்மேற்கில் உள்ள தவறுகளும் துணை போகின்றன.

தூக்க அப்னியா என்பது ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவருடைய சுவாச அமைப்பின் மேல்பகுதியில் ஏற்படும் அடைப்புகளால் உண்டாகிறது. இதனால் அவருடைய தூக்கம் பாதிப்புக்குள்ளாகிறது, சில நேரங்களில் அவர் குறட்டைவிடவும் கூடும். தூங்கிக் கொண்டிருக்கும்போது நிகழும் இந்தப் பிரச்னைகளை ஒருவர் உணராமலே போகலாம், ஆனால் மறுநாள் அவர்கள் மிகவும் களைப்பாகக் காணப்படுவார்கள், வேலைகளை ஒழுங்காகச் செய்ய இயலாமல் சிரமப்படுவார்கள்.ஆக குறட்டை சம்மந்தபட்ட பிரச்சனைகளும் வாஸ்து கோளாறுகள் சார்ந்த பிரச்சனைகள் தான் என்ன வடகிழக்கில் வாஸ்துபடி இருக்கும் போது குறட்டை ஒழிந்து விடும்.

thukkam,தூக்கம் சார்ந்த பிரச்சனை
thukkam,தூக்கம் சார்ந்த பிரச்சனை

  நார்க்கோலெப்சி என்ற தூக்க பிரச்னை உள்ளவர்கள் பகல் நேரத்தில் திடீரென்று தூங்கிவிடுவார்கள்.சில நேரங்களில் இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, வேலை செய்துகொண்டிருக்கும்போதே அல்லது வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே தங்களையும் அறியாமல் தூங்கிவிடக்கூடும், இது மிகுந்த ஆபத்தாக வாய்ப்புண்டு.பிற தூக்கத் தொந்தரவுகள் என்று சொல்லும்போது இன்னும் பல தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளன, உதாரணமாக தூக்கத்தில் நடப்பது, இரவு நேரத்தில் பயப்பட்டுக்கொண்டு அல்லது கெட்ட கனவு கண்டு விழித்தெழுதல், குழந்தைகள்  படுக்கையில் சிறுநீர் கழித்தல் மற்றும்,இரவு நேரத்தில் குழந்தைகள் தனியாக கழிவறை செல்லாது பயப்பட்டுக்கொண்டு தூக்கத்தை கெடுப்பது,இதனால் இது ஒரு காலகட்டத்தில் தூக்கம் சார்ந்த நோயாக மாறி விடுவது.இப்படி தூக்கம் சார்ந்த நிகழ்வுகளில் பல பிரச்சனைகளுக்கு முழுக்க காரணம் ஒருவீட்டின் நான்கு மூலைகளும் தான்.ஆக நான்கு விதமான தூக்கப் பிரச்சினைகளும் நான்கு மூலைகளும் சரியாகும் போது சரியாகி விடும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)