எனது வாஸ்து பயணங்கள்

எனது வாஸ்து பயணங்கள்

Vastu Tips for portico
Vastu Tips for portico

 

 

 

 

 

 

என் வாழ்நாளில் ஓர் வீட்டிற்கு வாஸ்து பணிக்காக சென்று ஏறத்தாழ 5 மணி நேரம் செலவிட்டது மதுரையில் தான் இருக்கும்.இதுபோல அவ்வளவு நேரம் நான் எங்கும் நேரத்தை எடுத்துக்கொண்டு பார்த்தது கிடையாது.

பொதுவாக என்னை வாஸ்து பார்க்க கூப்பிட்டுவிட்டு அங்கு இருக்கின்ற மக்கள் மட்டுமே அதிகம் பேசுவார்கள். ஆனால் அங்குள்ள மக்கள் என்னை அதிகம் பேச வைத்து விட்டார்கள். அந்த வீட்டில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் முறை என்னை பேசவைக்கும் சூல்நிலையை ஏற்படுத்தி விட்டது. 5 மணி நேரங்கள் செலவிட்டு ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு அந்த இல்லம் ஒன்றும் பெரிய தொட்டிகட்டு வீடுகள் கிடையாது. மிகச்சிறிய அளவில் சிறிய வீடாக இருந்தாலும் இந்த வீட்டில் வசிப்பவர்களின் அன்பும் பண்பும் மிகப்பெரிய செயல் ஆகும்.

இந்த வீட்டை ஆந்திரா மற்றும் சென்னையில் இருக்கும் தொலைகாட்சி புகழ் இரண்டு வாஸ்து நிபுணர்கள் துணையுடன், கட்டியிருக்கின்றார். ஆனாலும் பல இழப்புகள் காரணமாக அதை சரி கட்ட அதன் பின் பெங்களூரை சேர்ந்த பிரமிடு வாஸ்து வியாபாரி ஒருவர் மூலமாக வீட்டிற்கு எந்த விதத்திலும் உதவாத பிரமீடுகளை இருபத்திஐந்து ஆயிரம் வாங்கி கொண்டு பிரமிடுகளை கொடுத்து போகின்றார். பிரமீடுகளை வாங்கி உபயோகப்படுத்தி பார்த்த பின்  தான் தெரிந்தது  அது வேலை செய்யவில்லை.அதாவது அவர்களின் கஷ்டங்கள் நீங்கவில்லை.

அதற்குபிறகு  திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த சித்தர் வழி வந்த ஒரு வாஸ்துநிபுணர் தொடர்பு இவர்களுக்கு கிடைகின்றது.அவரும் வீட்டை இடிக்காமல், உடைக்காமல் வீட்டிற்குள் தகடுகள் புதைத்து, வீட்டை செய்து, அவர்களுடைய பிரச்சினைகளை சரி செய்து தருகிறேன் என்றுசொல்லி இருபது ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி சென்றுவிட்டார். .

இப்படி இருக்கின்ற நேரத்தில் என்னுடைய பெயர் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.என்மேல் நம்பிக்கை வைத்து அழைக்கின்றனர். ஆகவே அவர்களை சந்தித்தேன். சந்தித்த பின் நான் அவர்களிடம் தெளிவாக பேசினேன்.

எனது வாழ்நாளில் இதுபோல நல்ல சிறந்த கூட்டுக் குடும்பத்தை கண்டது கிடையாது.  எப்போதும் இப்படியே ஒற்றுமையாக இருக்கவும் என அவர்களிடம் கூறி, அவர்கள்கட்டிய வீடு சரியான வாஸ்துவில் இல்லை என்றாலும் பெரிதாக இடிக்காத வகையில் சிறிய மாற்றங்களை மட்டும் செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறினேன்.

வீட்டில் உள்ள 3 ஆண் வழி வாரிசுகளை வரவழைத்து மற்றும் வீட்டில் கடைசி குட்டியான பெண்குழந்தையை குறிப்பிட்டு இவர்களை எல்லாம் பத்திரமாக, சந்தோஷமாக பார்த்து கொள்ளவும்.இவள் வழியாக உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் இறங்கி உள்ளது.ஆகவே இவளை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். இவள் சிரித்தால் வீடு சிரிக்கும்; வீடு செழிக்கும்;இவள் அழுதால் வீடு அழும்.ஆகவே அவளை மகாலட்சுமி போல பாவித்து வாருங்கள் அதனால் வீட்டில் சந்தோஷம் நிரம்பி வழியும் என்று பலவிஷயங்களைபேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.