L வடிவ அமைப்பில் ஒரு மூலை இல்லாமல் வீடு இருக்கலாமா ?

chennaivasthu
chennaivasthu

இந்திய பெருங்குடி மக்கள்

மேற்கூரிய கேள்விக்கு இருக்ககூடாது என்பதுதான் எனது பதில் ஏனென்று சொன்னால்,இன்றைய நவீன வாஸ்து வீதிகள் என்ன சொல்கிறது என்றால் ஏற்கனவே நமது இந்திய பெருங்குடி மக்கள் வீடுகட்டி வாழ்ந்த முறையான சதுரம் அல்லது  செவ்வக அமைப்பில் மட்டுமே இருக்க வேண்டும். அதனை மீறும் அமைப்பில் கட்டிடங்கள் கட்டி வாழ்வது தவறு ஆகும்.

மிகச்சிறந்த வாழ்க்கை வாழ்வார்கள் ஆனால் ஏதாவது ஒன்று இல்லாத வாழ்வு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.இது உலக நடைமுறை வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களுக்கு தெரியாது.

எங்கள் கொங்கு நாடு பகுதிகளில் இந்த அமைப்பு உள்ள வீடுகளை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். நான் அங்கு வாஸ்து விசயமாக பயணம் மேற்கொள்ளும் போது இது வாஸ்துபடி தவறு என்று சொன்னால் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆக இந்த இடத்தில் அவர்களின் கர்மா தியரிபடி அப்படிப்பட்ட இல்லத்தில் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்கின்ற நியதி உள்ளது.இதனை மாற்றி அமைக்க இறைவனால் மட்டுமே முடியும்.

இந்த பதிவில் ஒரு படத்தினை இணைத்து பதிவிட்டுள்ளேன் அதில் முதல் படத்திற்கான எனது விளக்கத்தினை பார்ப்போம்.முதல் வரைபடத்தில் வடகிழக்கு மட்டுமே இல்லாது அமைப்பாக உள்ளது இதனால் மிகப்பெரிய பாதிப்புகளை கொடுத்ததாக தெரியவில்லை ஆனால் இந்த இடத்தில் அவர்களின் வாரிசு அதாவது இரண்டாவது வாரிசு  வெளியில் கிளம்பி விடுகின்றனர் அந்த வீட்டில் வசிப்பது கிடையாது. இதற்கு ஒரு முக்கிய பலம் காரணமாக பெரிய பாதிப்புக்களை கொடுப்பது இல்லை.

இதைவிடுத்து இரண்டாவது மூன்றாவது அமைப்பில் ஒரு வீடு இருந்தால் மிகத்தவறு.ஆனாலும் எப்படியோ வண்டி ஓடுகிறது என்ற அமைப்பில் நடக்கும். இந்த அமைப்பு எந்தமாதிரி பலன்களை கொடுக்கும் என்றால் பெண்கள் வாழ்க்கையை கெடுக்கும்.

நான்காவது அமைப்புப்படி ஒரு இல்லம் இருக்கிறது என்றால் ஏற்கனவே நான் பல பதிவுகளில் சொன்னமாதிரி நேராக சுடலை காட்டில் குடிசை அமைத்து தங்கி விடலாம். அங்குள்ள எம்பெருமான் சிவன் பார்த்துக்கொள்வார்.

எது எப்படி இருந்தாலும்,நானே ஒவ்வொரு திசையிலும் வீட்டின் கார்பெட் இடம் இல்லாத அமைப்பில் வீடு கட்டுவது என்பது மிகத்தவறு.

l shaped house
l shaped house

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:

+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

E-mail:
[email protected]

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

l shaped house
l shaped house