வீட்டின் உள்ளே வாஸ்து

வீட்டின் உள்ளே வாஸ்து

Tamil-Daily-News-Paper
Tamil-Daily-News-Paper

 

 

 

 

 

 

 

 

தெற்கு வடக்கு பார்த்து சமைக்காதீர். மருத்துவ செலவுகளுக்கு பணம் விரைந்து கரையும்.

உணவு உண்பது மற்றும் படிப்பது போன்ற அன்றாட நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி இருப்பதுதான் நல்லது.

வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது.வடக்கே தலை வைத்தால் வாழ்வு இழந்து போகும்.

வீட்டின் வடக்கே, கிழக்கே உயராமாக வளரும் நிழல் தரும்
மரங்கள் இருப்பது தவறு.

வீட்டின் தெற்கு அல்லது மேற்கே உள்ள உயரமான மரங்களை எக்காரணம் கொண்டும்
வெட்டக் கூடாது.

ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது.இது தஞ்சாவூர் பகுதிகளில் அதிகமாக இருக்கிறது. இலங்கையில் இதுபோன்ற அமைப்புகள் உண்டு.

வீட்டின் வடகிழக்கில் நல்லது என்று மிகப்பெரிய நீர்தேக்கத் தொட்டி அமைக்கக் கூடாது. அது வடகிழக்கு சக்தியை தடுக்கும்.

வீட்டின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கில் தென்மேற்கு மூலையில் கழிவறை மற்றும்
செப்டிக்டேங்க் அமைக்க கூடாது.

வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும் கிழக்கேயும் அமைக்க
கூடாது.

வடக்கு, கிழக்கு சுற்றுச் சுவரின்மேல் பூந்தொட்டி வைக்கக்
கூடாது.

வீட்டின் தென்மேற்கு பகுதியில் மெயின்கேட், போர்டிகோ
தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால் ஆண்கள் வாழ்வு விரையம் ஆகும்.

வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கலாகாது.இது திசைகளை பொறுத்து நல்லது செய்யும்.

வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலி மனை நிலங்களை
வாங்கலாம்.ஆனால் சாலைகளை பார்த்து வாங்க வேண்டும்.

இல்லத்தின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை
இனமாகக்கூட வாங்கி சேர்க்ககூடாது.ஆனால் கட்டிடத்தோடு வரும்போது சாலைகளை கவனித்து வாங்கலாம்.