வாஸ்து அமைப்பில் செப்டிக் டேங்க் எப்படி அமைக்க வேண்டும்?

Septic-tank-plastic
Septic-tank-plastic

என்ற அமைப்பு சரியான திசை, சரியான இடமாக இருக்க வேண்டும். தண்ணீர் தொட்டிக்கு சரியான இடம் தேர்ந்தெடுக்கின்றோமோ அதுபோல் பார்த்து பார்த்து அமைக்க வேண்டும். இந்த செப்டிக் டேங்க் விசயத்தில் மக்களுக்கு பெரிய விழிப்புணர்வு கிடையாது. தண்ணீர் தொட்டிக்குக்கூட இரண்டு வீதி மாற்று இடங்கள் உள்ளது. ஆனால் செப்டிக் டேங்க் மட்டும் மிக சரியாக ஒரு இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

செப்டிக் டேங்க் என்பது வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். அதில் வடமேற்கு மூலை விடடம் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வடகிழக்கு தண்ணீர் தொட்டி இருந்தால் மட்டுமே வடமேற்கு செப்டிக் டேங்க் சாலச்சிறந்தது. ஏன் என்றால் தண்ணீர் தொட்டி இல்லையெனில் வடமேற்கு பள்ளம் அமைப்பில் இருந்து விடும். இதன் நீள அகலம் உயரம் தண்ணீர் தொட்டியின் அளவை விட குறைவாக இருக்க வேண்டும். நம்மால் முடிந்தால் வீட்டின் வெளிப்பகுதியில் பொதுத்தடமாக இருந்து அதிக இடங்களாக இருந்தால் வெளி அமைப்பில் அமைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு.

செப்டிக் டேங்க் அமைப்பை தரையோடு தரையாக மூடப்பட்ட அமைப்பாக நமது வெளிப்பார்வைக்கு செப்டிக் டேங்க் எங்கு உள்ளது என்று தெரியாமல் அமைப்பது சிறப்பு.

Leave a Comment