நமது வாழ்வில் சந்தோசத்தை பெறுவது எப்படி?

நமது வாழ்விலும்,மற்றவர்கள் வாழ்விலும், சந்தோசத்தை பெறுவது எப்படி?

அன்பே சிவம்!!
பகவதி அம்மையே சரணம்!!

இந்த பூமியில் மிக சந்தோசமாக வாழுங்கள். ஒரு மகான் போல வாழுங்கள்.நீங்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்று சொன்னால் எதன் மீதும் பற்றுக்களை வைக்க வேண்டாம்.உங்களுக்கு எது தேவையோ அது உங்களை படைத்த இறைவனுக்கு தெரியும்.

உடல் முழுதும் எண்ணெய் பூசி புரண்டாலும் ஒட்டுகின்ற மண் மட்டுமே ஒட்டும் என்பதனை போல நமக்கு எது கிடைக்குமோ அது மட்டும் கிடைக்கும். நாம் போராடி கிடைக்க வில்லையா வேதனை படவேண்டாம். கிடைக்காதன எல்லாம் ஒட்டாத மண்போலத்தான். எதை எந்த நேரத்தில் நமக்கு கொடுக்க வேண்டும் என்று இறைவனால் இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது ஆகும்.

எல்லா நேரங்களிலும் எல்லா மனிதர்களுக்கும் பிரச்சினை கிடையாது சில நேரங்களில் சில உறவுகளாலும், சில நண்பர்களாலும் வலி வேதனைகளை அனுபவிக்க வேண்டிவரும்.அந்த நேரத்தில் ஒருசில வாசகங்களை மனதில் வைத்துக்கொண்டால் உறவுகள் மூலம் ஒடுங்கி இருக்காமல் நம்மால் வெற்றி பெற முடியும்.

கூட்டில் இருந்து குஞ்சு பறக்க நினைத்தால்,
குருவியின் சொந்தம் அதோடு முடிந்து விடும்.

ஆட்டு குட்டி தன் தாய் ஆட்டிடம் ஊட்ட மறந்தால்
அதோட சொந்தம் மாறிவிடும்.

உடலை விட்டு உயிர் பிரிந்து காலை
நீட்டி வைத்து இறந்த உடலை நெருப்பிடும் போது
மண்ணாசை,பெண்ணாசை,
பொன்னாசை போன்ற ஆசைகள் எல்லாம் ,
வாய்க்கு காட்டிய வாய்கரிசி மூலம்
கணக்கு தீர்த்திடும் அனைத்து சொந்தங்களும்,

பணத்தாசையாலே பாவங்களை மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்யும் பகல் வேஷக்காரர்களுக்கும் அழிவு என்பது ஒருநாள் உண்டு.

சுவர்களை வைத்து நம்மை காத்துக்கொண்டாலும்,கணக்கில் காட்டாது எத்தனை செல்வங்கள் சேர்த்தாலும்,
செத்தபின்னே அத்தனைக்கும்
சொந்தக்காரன் யாரு என்று கேட்டால் உண்மையில் செத்து போனவன் கிடையாது.

ஏனெனில் தாத்தா பாட்டி கட்டிய வீட்டில் 80 சதவீத மக்கள்இன்று குடியிருப்பது கிடையாது.அதாவது விற்று இருப்பார்கள் அல்லது இடிந்து விழுந்து குட்டிசுவராக இருக்கும்.நம்ம ஐயனுக்கு, ஐயன் ஆயா என்ன சம்பாத்தியம் மற்றும் சொத்துபத்து வைத்து விட்டு போனார்கள் என்றால் 50 சதவீத மக்களுக்கு தெரியாது.நம்ம சம்பாதிக்கின்ற காசுபணங்கள் நம்ம கொள்ளு பேரன் பேத்திகளுக்கு தெரியாது.இப்படி தெரியாத உலகில் நமக்காக வாழாமல் வாழ்ந்து வருகின்றோம்.

இதனை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டோம் என்று சொன்னால்,நம்மோடு வாழ்கின்ற மனிதர்களோடு நல்ல உறவுகளுக்கு விட்டு கொடுத்து வாழ்ந்து,

கொண்டு செல்ல என்ன உண்டு என்ற எண்ணத்தை மனதில் வைத்து, அதனால் நமக்கு மற்றும், நமது உறவுகளின் தேவைகள் போக, நமது வாழ்வின் தேவைகள் போக, நமது வருமானத்தில் நமது செலவுகள் போக மீதம் இருந்தால் நம்மால் முடிந்த உதவிகள் செய்துஏற்படுத்தி வாழ்வோமாகுக.

 

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI. A. JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122

whatsapp no :. +91 9965021122

E-mail: [email protected]

———————————————————————————-

#vastu consultant in tamilnadu, malaysia, srilanka,
#vastu consultant in chennai,
#vastu consultant in coimbatore, erode, tirupur,
#vastu consultant In madurai, trichy, tirunelveli,

Leave a Comment