நமது வீட்டுக்கு அருகில் ஒரு இடம் விற்பனைக்கு வருகிறது என்றால் அதனை வாங்கலாமா?

place near our land for vastu
place near our land for vastu

ஏற்கனவே நமக்கு வீடு இருந்து நமது வீட்டுக்கு அருகில் ஒரு இடம் விற்பனைக்கு வருகிறது என்றால்  அதனை வாங்கலாமா?

நமது இடத்திற்கு அல்லது வீட்டிற்கு அருகில் விற்பனைக்கு வரக்கூடிய காலி இடங்களை எப்போதும் ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக்கொண்டு தான் வாங்க வேண்டும்.இல்லையென்றால் நமக்கு ஏதேனும் நன்மை அல்லது  தீமைகள் உண்டாகி விடும். அப்படி வாங்கும் போது நன்றாக இருக்கிறது என்றால் ஏற்கனவே யார் பெயரில் அந்த இடம் உள்ளதோ அவரின் பெயரிலேயே வாங்க வேண்டும்.
நமது இல்லத்தின்  அருகாமையில்அதாவது ஒட்டி இருக்கும் இடம் விற்பனைக்கு வரும்போது பொதுவாகவே எல்லோரும் நினைப்பது என்னவென்றால் நமக்கு மிக மிக அருகில் கிடைக்கிறது. அதை வாங்கி விட்டால் நமக்கு எதிர்காலத்தில் இடம் விஸ்தாரமாக இருந்து நம்முடைய பிள்ளைகள் வண்டி வாகனம் நிறுத்தி கொள்ள ஏதுவாக இருக்கும். அல்லது தோட்டம் அமைப்பை ஏற்படுத்தி கொள்ளலாம் என்று நினைப்பார்கள். 
நமது வீட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில்   மனைகள் வாங்குவதில் எந்த தவறுகளும் இல்லை.  அதனால் முழுக்க முழுக்க நன்மைதான்.  நீங்கள் வடக்கு கிழக்கு மனைகளை வாங்கும்போது,எதிரில் நமது வீட்டிற்கு சாலைகள் வரும் போது அது தவறான அமைப்பாகி விடக்கூடாது. அதனால் ஒரு வாஸ்து ஆலோசனை அவசியம்.
 நமது இடத்திற்கு தெற்கு புறம் ஒரு காலி இடம் விற்பனைக்கு வருகிறது என்றால் அதை வாங்குவது மிக மிக தவறு.

 

 நமது இடத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள காலி இடத்தை வாங்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு. ஒருவேளை நீங்கள் வாங்க வேண்டுமென்றால் ஒரு நல்ல வாஸ்து நிபுணரின் தூணை கொண்டு மட்டுமே வாங்க வேண்டும்.

 

place near our land for vastu
place near our land for vastu

 ஒருவர் வீட்டின் அருகே  வாங்கக்கூடிய இடத்தின் மதிப்பு பல லட்சம் முதல் கோடிக்கணக்கான விலை மதிப்பாக இருக்கும். அப்படி வாங்கும் போது வாஸ்து அமைப்பில் தவறான இடம் வாங்கி விட்டோம் என்றால் விற்பனை செய்வது என்பது மிகவும் கடினம். அதனால்  வாங்கும் முன்பு  ஒரு நல்ல வாஸ்து நிபுணரின் ஆலோசனையுடன் வாங்குவது மிகவும் நல்லது.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)