வாஸ்து அமைப்பில் உறவினர் அறை எப்படி இருக்க வேண்டும்?

Guest room in Vastu
Guest room in Vastu

வாஸ்து அமைப்பில் விருந்தினர் அறை

இந்திய கலாச்சார அடிப்படையில் நம் முன்னோர்கள்  கூட்டு குடும்பமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இன்று பொருளாதார நோக்கில் மக்களின் பயணம் இருப்பதால் வேறு வழியின்றி கல்யாணம் நடந்த சில நாட்களிலேயே தனிக்குடித்தனம் சென்றே ஆக வேண்டும் என்கிற சூல்நிலை ஆகிவிட்டது.
  அந்தக்காலத்தில் விருந்தினர் என்பவர்கள் தூரத்து சொந்தங்களாக மட்டுமே இருந்தனர்.இன்று  விருந்தினர் என்பது நமது மகள் மற்றும் அப்பாவுடன் பிறந்த அக்கா தங்கை மட்டுமே உறவினர்கள் என்று ஆகிவிட்டது. ஆக எது எப்படியோ விருந்தினர் அறையை எங்கு  எப்படி அமைப்பது.
இன்று  தமிழ்நாட்டில் புதிதாக கட்டக்கூடிய வீடுகளில் விருந்தினர் அறை என்பதனை கட்டாயம் கட்டுகின்றனர்.எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதியிலும் தென்மேற்கு பகுதியிலும் விருந்தினர் அறையை அமைக்க கூடாது.

வடமேற்கு பகுதியில் மட்டுமே விருந்தினர் அறை வருவது சிறப்பு. அங்கு அமைக்கும் விருந்தினர் அறைகள் எக்காரணம் கொண்டும் வடமேற்கில் வஞமேற்கு மூலைக்கு வரக்கூடாது. அதாவது கொஞ்சம் வடமேற்கு தள்ளி வடமேற்கில் வேறு அமைப்புகளை உறுவாக்கி விட்டு அமைக்க வேண்டும்.ஆக  வடமேற்கு பகுதியில்உறவினர்களோ, விருந்தினர்களோ, தங்கி இருக்கும் போது  ஒரு நாள் இரண்டு நாள் அதற்கு மேல் அவர்களால் அங்கு தங்க முடியாத நிலை உருவாக்கி உடனடியாக வெளியேற்றும் அமைப்பாக வடமேற்கு மிறிவிடும்.
 ஒரு வீட்டில் எந்தக்காரணமாகவும் தென்மேற்கு பகுதியில் உள்ள குடும்பதலைவரின் அறையில் விருந்தினரை தங்கும் அமைப்பாக அமைக்கக்கூடாது.   எதற்காக தென்மேற்கு அறையில் விருந்தினர் அறையாக உபயோகிக்க கூடாது.
  ஆக ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருநாள்   தங்கி அந்த வீட்டின் மொத்த செயலிலும் தனது அதிகாரத்தை செலுத்தும் நபராக அங்கு வந்து தங்கும் உறவினர்கள் மாறிவிடுவார்கள். அந்த இல்லத்தில் இருக்கும் நபர்களை தனது பேச்சைக் கேட்கும் அளவிற்கு அந்த குடும்பத்தை தன் பக்கம் மாற்றிவிடும் அமைப்பாகி விடும். எனது வாஸ்து பயணத்தில் இது போன்ற ஒரகரு வீடுகளை பார்த்த காரணமாக இந்த பதிவு ஆகும்.

 

 ஆகவே உங்களது வீட்டில் தென்மேற்கு மற்றும் தெற்கு மத்திய பகுதி, மேற்கு மத்திய பகுதி, மற்றும் வடகிழக்கு  பகுதிகளில்  யாருக்கும் விட்டுக்கொடுக்காதீர்கள். வடமேற்கு பகுதி மட்டுமே உறவினர்களின் அறையாகும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)