தெருகுத்துவில் வாஸ்து

தெருகுத்துவில் வாஸ்து சாஸ்திரம்.

chennaivastu.com
chennaivastu.com

 

 

 

 

 

 

 

கிழக்கில் இருந்து ஒரு மனைக்கு வடகிழக்கில் குத்தும் அதாவது அதற்கு நேர் ஈசான பகுதியில் மோதும் சாலைகள் நல்ல ரஜவாழ்க்கை வாழக்கூடிய அமைப்பை கொடுக்கும்.

அதேபோல வடகிழக்கில் வடக்கு பகுதியில் இருந்து வரும் சாலையானது மனைக்கு வடகிழக்கில் குத்தும் போது நல்ல அற்புதமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பை கொடுக்கும்.

மேற்கூரிய இரண்டு தெருகுத்துக்கள் இருக்கின்ற வீடுகளில் வசிக்கின்ற மக்கள் அந்த வீட்டில் வேறு பல வாஸ்து கோளாறுகள் இருந்தாலும், கர்ணனுக்கு கவச குண்டலங்கள் போல அங்கு வசிப்பவர்களை காப்பாற்றகூடிய செயல்களை செய்யும்.

இதற்கு அடுத்த நிலையில் வடமேற்கில் வந்து மனைக்கு குத்துகின்ற தெருக்கள் நல்ல வியாபார மக்களின் வாழ்வில் துணை செய்யும்.

அதேபோல தென்கிழக்கில் தெற்கு பகுதியில் இருந்து வருகின்ற தெருவும் நல்ல பலனை கொடுக்கும். அதிக வேலையாட்கள் வைத்திருக்கும் தொழிலதிபர்கள் அதாவது நூற்றுக்கணக்கான ஆட்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகளுக்கு ஏற்ற தெருகுத்துக்கள் ஆகும்.

இந்த இடத்தில் ஒரு தெரு சரியான இடத்தில் உங்கள் மனைக்கு குத்துகின்றதா ,அல்லது கொஞ்சம் தள்ளி குத்துகின்றதா?,என்பதனை ஒரு நல்ல வாஸ்துவில் அனுபவம் உள்ள வாஸ்து வல்லுனர்களின் துணை கொண்டு நிர்நயம் செய்வது நல்லது. ஏனெனில் நீங்கள் நல்லது என்று இருக்கும் தெருகுத்துக்கள் தவறானவையாக இருக்கும். அல்லது நல்ல தெருக்குத்துவை ஒருவர் தவறான தெருகுத்துக்கள் என்று விற்பனை கூட செய்து விடலாம். ஆகவே எதனையும் வாஸ்து நிபுணர் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நல்லது.