விதைகள் அற்புதமானவை.

விதைகள் அற்புதமானவை. உயிரை உள்ளே அடைந்திருக்கின்றார் இறைவன். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கடினமான ஒரு ஓட்டை இறைவன் கொடுத்திருக்கிறார். அந்த ஓடு தான் அதற்கு சாதகமான காலம் வரும் வரை பாதுகாத்து வைத்திருக்கிறது. ஒரு சில விதைகளை பல நூறு ஆண்டுகள் கூட வைத்திருக்கலாம் என்று அறிவியல் கூறுகிறது  தனக்கு தேவையான மண்ணும், ஈரமும், உயிர் காற்றும் கிடைக்கும்போது, துளிர்விட்டு வளர்கிறது.

இதுபோல ஒரு நல்ல மனசு உள்ள உயிர் என்கிற  விதையும் சந்தர்ப்பங்களுக்கு காத்திருக்கவேண்டும். எது தேவையோ அதற்காக தேடிக் கொண்டிருக்கின்றன. தேடுதல் மட்டும் கிடையாது. தன்னை தயார் செய்து கொண்டிருக்கின்றன.அல்லது தன்னை சரி செய்து கொள்கின்றனர்.

கூட்டுக்குள்ளே அடைந்து இருக்கிற புழு பறப்பதற்கு, தன்னை உருமாற்றி கொண்டு இருக்கும். வெளியிலிருந்து எந்த உணவு அதற்கு கிடைக்காது . அது போல தான் ஒருசில மனித உள்ளங்கள் எந்த உதவியும் கிடைக்காத நிலையிலும், கிடைக்காமல் இருந்தாலும், தனக்கான காலம் கனியும் வரை காத்திருக்க வேண்டும். சந்தர்ப்பங்களை தேடி, கூடவே தன்னையும் சரிசெய்து கொள்ள வேண்டும்.

ஜெர்மனி புரட்சியாளர் கரிபால்டி புரட்சி காரணமாக 14 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு அன்னிய தேசத்தில் விவசாயத் தொழிலாளியாக வாழ்ந்தார். இந்த நாளில் தன்னுடைய புரட்சியின் வேகத்தையும் தனது திறமையையும் தனது கூட்டத்தையும் இழந்திருப்பார் என்று உலகம் கணித்தது. ஆனால் அவரின் வனவாசம் தாண்டி ஜெர்மனியில் புரட்சி காலம் கனிந்த போது மீண்டும் புரட்சிகள் செய்து வெற்றி பெற்ற  கர்மவீரர் ஆவார்.

ஜெர்மனியில் மொசாத் என்ற இசை மேதை வாழ்ந்துவந்தார் .
வளரும் பருவத்திலேயே அவரது இசைத் திறமை வளர்ந்து வந்தது. இசைத்துறையில் சாதனை படைக்கும் பொழுது நோய்வாய்ப்பட்டார். ஓரிரு ஆண்டுகள் நோயால் முடங்கிப் போனார். பிறகு நோயிலிருந்து மீண்டு வந்தார். அந்த காலகட்டத்தில் அந்த இசை சார்ந்த விஷயத்திலிருந்து துண்டிக்கப்பட்டதால், உலகம் என்ன நினைத்தது என்றால்,பழைய திறமை அவருக்கு வருவது கடினம் என்று நினைத்தது . ஆனால் முன்பை விட வேகமாகவும் சாதனைகளைச் செய்தார். எல்லோரும்  அவரை மூக்கில் விரலை வைத்து ஆச்சிரியப்பட்டு பார்க்கும்போது சொன்னார். நான் இந்த நாட்களில் இசை சார்ந்த நிகழ்வு இல்லாமல் இருந்தாலும் என் மனம் எப்போதும் அதே கற்பனைகளில் இருந்து, புதிய இசைதொகுப்பை வடிவமைத்துக் கொண்டே இருந்தன என்றார்.

எப்படி பக்தர்கள் இறைவனை நினைத்துக் கொண்டிருப்பதைப் போல, இலட்சியம், கொள்கை, உடைய மனிதர்கள் தனது லட்சிய உணர்வால் வாழுகின்ற போது, காலம் கனியும்போது இந்த விதைகள் மரங்களாக மாறி கைகொடுக்கும். இது உங்களுக்கும், எனக்கும் பொருந்தும். நன்றி  வணக்கம்.