வாஸ்துப்படி வாகனங்களை எங்கு நிறுத்தவேண்டும்?

CAR PORCH vasthu
CAR PORCH vasthu

வாஸ்துவும் வாகனம் நிறுத்தும் இடங்களும்,

 

மனித வளர்ச்சியில் போக்குவரத்து என்பது மனிதப் பிறப்போடு ஒன்றிய செயல் ஆகும். முதலில் மாடுகளையும்,குதிரைகளையும், எறுமைகளையும்,பழக்கம் செய்து போக்குவரத்திற்காக பயன்படுத்தி வந்தார்கள்.அதன்பிறகு மாட்டு வண்டி பயணம் பிறகு மிதிவண்டி இன்று கார்களும் மோட்டார் சைக்கிள்களும் வந்து விட்டது.
இப்படி மனித வாழ்வில் மிக முக்கியமான பங்கினை  நம்முடைய வாகனங்களை நிறுத்துவதற்கு ஒரு அமைப்பை ஏற்படுத்தும் போது அது தவறான அமைப்பாகி நமக்கு தீமைகளை செய்யும் வீடாக மாறிவிடுகிறது.அந்த வகையில் நாம் பயன்படுத்தக்கூடிய வாகனத்தை நிறுத்தி வைப்பதற்கு ஒரு பாதுகாப்பான இடம் வேண்டும். அதை எங்கு எப்படி உருவாக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

 
இடப்பற்றாக்குறை உள்ள நகரங்களில் பல அடுக்குகள் உள்ள மாடி வீடுகளுக்கு எட்டு ஆடிகள் தனியாக கான்கிரீட் அமைப்பை உறுவாக்கி செய்யும் போது மிகச்சிறந்த அமைப்பாக அமைக்க முடியும். ஆனால் சிலர் என்ன செய்கின்றனர் என்றால் கீழே பள்ளம் பறைத்து தவறான வாஸ்து அமைப்பில் உறுவாக்கி அந்த குடியிருப்பில் வசிக்கின்ற அனைவரையும் சிறமப் படும் வாழ்க்கையை வழங்கி விடுகின்றனர்.

 
ஒருசிலர் தனிப்பட்டு கட்டக்கூடிய வீட்டிற்கு வாகனங்கள் நிறுத்த போர்டிக்கோவை பயன்படுத்துகிறார்கள். அது மிகவும் தவறு. போர்டிக்கோ அடியில் காரை நிறுத்துவது தவறு. அதனால் அந்த வீட்டில் வட கிழக்கு பகுதி கனமான பகுதியாகவே இருக்கும்.ஆனால் இந்த இடத்தில் சிலர் சொல்லுவார்கள் வாகனங்கள் என்றுமே அங்கு நிற்பது இல்லை கொஞ்சநேரம் நிற்கும் மற்ற நேரங்களில் வெளியே சென்று விடும் என்பார்கள். அதாவது ஒருவன் சுமக்க முடியாத சுமைகளை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருக்க முடியும். அதுபோலத்தான் என்னைப்பொறுத்தவரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 
ஒரு வீட்டிற்கு வடமேற்கு மற்றும் தென்கிழக்கில்  பகுதியில் மட்டுமே வாகனங்களை நிறுத்தும் இடங்களை அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும் வாகனம் நிறுத்தும் இடங்கள் சரியான வாஸ்து விதிகளுக்கு பொறுந்தும் அமைப்பில் இருக்க வேண்டும். ஆகவே அங்கு வாகனங்கள் நிறுத்த இடங்கள் இல்லையெனில் வாகனங்கள் நிறுத்தும் அமைப்பினை ஏற்படுத்த வேண்டாம்.

 

vastu for car parking
vastu for car parking

எப்படி இருந்தாலும் ஒரு வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மற்றும் தென்மேற்கு பகுதியிலும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை அமைக்க வேண்டாம்.ஆக ஒரு வீடு கட்டும் போது ஒரு வாஸ்து நிபுணர் துணை இருக்கும் போது இது மாதிரியான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைத்து நன்றாக வாழமுடியும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)