பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்கிறார்களே, பதினாறு என்றால் என்ன?

ஆயாதி கணிதம்
ஆயாதி கணிதம்

மனையடி சாஸ்திரத்தில் பதினாறு பேறுகள்

இந்த பதினாறு பேறுகளுக்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா என்றால் உண்டு என்றுதான் சொல்லுவேன்.அவரவருக்குத் தோன்றும் வகையில் பதினாறு பேறுகள் சொல்லப்படுகின்றன. அந்தவகையில் இது ஒரு மனைசாஸ்திரத்திற்கும் பொருந்தும்.
புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி, நன்மைகள், 

 பொன், தானியம், அழகு, இளமை, நல்வாழ்வு, அறிவு, பெருமை , துணிவு, நீண்ட வாழ்வு, நோயின்மை, நுகர்ச்சி எனப் பதினாறைச் சிலர் சொல்கின்றனர். 
வேறு சிலர் அபிராமி பட்டரின் பாடலான, 

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் 

கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் 

ஔதாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும்” என்பதைக் காட்டுவர். 
இன்னும் சிலர் காளமேகப் புலவரின், 
“துதிவாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம் 

மதி தானியம் சௌபாக்கியம் போகம் – அறிவு அழகு

புதிதாம் பெருமை அறம் குலம் நோவகல் பூண்வயது

பதினாறு பேறும் ……
 என்பதனை  கூறுவார்கள்.
மேற்சொன்னவை ஆண்களை மனதில் வைத்துச் சொல்லப்பட்டவையாகத் தோன்றுகின்றன. ஆணுக்கு அன்பகலாத மனைவி வேண்டுமாம். எனில் பெண்ணுக்கு..? ஆக பெண்ணிற்கு எனும் போது ஒரு பெண் என்பவள் ஒரு சந்ததியை உருவாக்குபவள்.அப்படிப்பட்ட பெண்ணிற்கு கரு முதல் திரு வரை என்று சொன்னால் அது வீடு மட்டுமே.அந்த வீட்டில் அனைத்து விதமான தேவைகளும் அந்த பெண்ணிற்கு கிடைக்கும் போது அந்தப்பெண்ணின் வாழ்வு லகுவாகிவிடும்.அதற்கு கட்டாயமாக பதினாறு பேறுகளை கொடுக்கும் மனையடி சாஸ்திர ஆயாதி கணித பொருத்தம் பதினாறும் பொருந்தி வரவேண்டும்.

அப்படிப்பட்ட பதினாறு பொருத்தங்களில் பல உட்பிரிவு பொருத்தங்கள் உண்டு. ஆக குறைந்த பட்சமாக பத்து பொருத்தங்களாவது பொருந்தி இருக்கும் வீடாக இருக்கும் போது அந்த வீட்டில் வசிக்கும் பெண் மற்றும் ஆண் மக்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இந்த வாஸ்து பொருத்தம் சரியாக இருக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கு கட்டாயமாக நிலையான புகழ்,அழியாத கல்வி,வீழாத வெற்றி என்றும் நிலைத்து நிற்கும் செயல்,என்றும் எதற்காகவும் தடுமாறாத மனது,திருமண நிகழ்வுக்கோ மனைவி மக்களின் கழுத்தில் கண்டத்தை தராத நகைகள் நிலைத்து இருக்கும் தன்மை,ஆழாக்கு படியில் அளக்க முடியாத தானிய செல்வங்களும் கிடைக்கும்

Ayadi Calculation
Ayadi Calculation

வாழ்வு,என்றுமே லட்சுமி கரமான வாழ்வு,என்றுமே நிலையான இளமையுடன் வாழ்வு,நல்ல அறிவுடன்,பண்புடன்,துணிவோடு பெருமையோடு,நோயில்லாத நீண்ட வாழ்வு,ஆண்டு அனுபவித்து வாழும் வாழ்க்கை அமைய ஆயாதி பொருத்தங்கள் மற்றும் வீடு சதுரம் செவ்வக அமைப்பில்,வடக்கு கிழக்கு அதிக இடங்களுடனும்,தெற்கு மேற்கு குறைந்த தென்மேற்கு உயர்ந்த அமைப்புடனும்,வாசல் அமைப்புகள் சாஸ்திர அமைப்புக்கு பங்கம் இல்லாமல் இருக்க வேண்டும். இப்படி எல்லா நிலைகளிலும் சரியான வீடு ஒரு வீட்டின் பெண்களுக்கு சிறந்த மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை கட்டாயம் கொடுக்கும்.ஒரு வீட்டில் வாஸ்து அமைப்பில் கூட குறைகள் இருக்கலாம் ஆனால் ஆயாதி பொருத்தங்களில் குறை இருக்கக்கூடாது என்பது எனது ஆலோசனை ஆகும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)