அருங்கரை அம்மன் ஆலயம், சின்னதாராபுரம்,

arungarai amman temple
arungarai amman temple

அருங்கரைஅம்மனின் அற்புத சிறப்புகள்

கொங்கு நாட்டில் உள்ள அம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் இதுவும் ஒன்று.மிகவும் முக்கியமாக  அம்பாள் கோயில்களில் தரப்படும் மஞ்சள் குங்குமம் இங்கு தரப்படுவது கிடையாது. இங்கு ஆலயத்தில் உள்ள நட்டடுப்பு சாம்பளே திருநீராக தரப்படுகிறது.இந்த ஆலயத்தின் அருகே அமராவதி ஆறு ஓடுகிறது இந்த ஆறு மாலை இட்டதுபோல வளைந்து செல்கின்றது.ஆரம்ப காலத்தில் அம்மன் நல்லதாய் என்று அழைக்கப்பட்டாள்.காலப்போக்கில் ஆறின் அருகே இருந்த காரணத்தால் அருங்கரை அமாமன் என்று அழைகாகப்பட்டாள்.

 

அருங்கரை அம்மன் ஆலயம்,
அருங்கரை அம்மன் ஆலயம்,

முன்காலத்தில் மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டவர்கள் இந்தப் பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் அமராவதி ஆற்றில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சமயம் மீனவர் ஒருவர் ஆற்றில் வீசிய வலையில் ஒரு பெட்டி சிக்கியது. அதை திறந்து பார்த்தபோது, அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது. தனக்கு அருள்புரிவதற்காகவே அம்பாள் ஆற்றில் வந்ததாக கருதிய அந்த மீனவர், ஆற்றங்கரையில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அந்தப் பெட்டியை வைத்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைவரும் பெட்டியையும், அதில் இருந்த அம்பாளையும் வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மீனவர்கள் அவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். ஆகவே பெட்டி இருந்த இடம் மண் மூடி புதைந்து விட்டது. பெட்டி இருந்த இடத்தில் பெரிய மேடு மட்டும் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சிலர் அங்கு மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்துள்ளனர். ஒரு முறை நல்லதாய் என்ற சிறுமி மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு பசு, மணல் மேடாக இருந்த இடத்தில் தானாக பாலை சுரந்தது. இதைக் கண்டு வியப்புற்ற அந்த சிறுமி, மணல் மேட்டின் மீது அமர்ந்தாள். அதன் பின் அச்சிறுமி எழவில்லை.
மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பின. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள், அவளைத் தேடி குறிப்பிட்ட இடத்திற்கு வந்தனர். அங்கு மணல் மேட்டில் சிறுமி அமர்ந்திருப்பதைக் கண்டு, அவளை வீட்டிற்கு வரும்படி அழைத்தனர். ஆனால் சிறுமியோ, ‘நான் இங்கேதான் இருக்க விரும்புகிறேன். பல ஆண்டுகளாக நான் இங்குதான் வசித்து வருகிறேன். என்னைக் கண்ட இந்த நாளில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள்’ என்று சொல்லி விட்டு, சிறுமி ஜோதியாக மாறி மறைந்து விட்டாள். அப்படிப்பட்ட நாளே மங்களவாரம் என்று சொல்லக்கூடிய செவ்வாய் கிழமை ஆகும். அதனால் இந்த ஆலயம் செவ்வாய் கிழமை மட்டுமே திறந்து இருக்கும்.மிகவும் பழமை மாறாது இருக்கும் ஒரே ஆலயம் இதுவே.கரூர்-சின்னதாராபுரம் அருகேயுள்ளது திருமங்கலம். இங்குள்ள அருங்கரை அம்மன் ஆலயத்தில் ராகு-கேதுவுடன் விநாயகப்பெருமானும் காவல் தெய் வங்களும் மட்டுமே உள்ளனர். பெண்கள் இந்த ஆலயத்திற்குள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. வெளியில் நின்றுதான் வணங்க வேண்டும். ஆ ண்கள் மட்டுமே உள்ளே சென்று வணங்குகின்றனர். அம்மன் இல்லாத ஆலயம் அம்மன் பெயரில் அழைக்கப்
படுவது அதிசயம்தானே!? 

ஆலய பலன்கள்:

விவசாயம் செழிக்க மற்றும்,எனது வாஸ்து பயணத்தில் ஏற்பட்ட ஆராய்ச்சி அடிப்படையில் இந்த ஆலயம் செல்வ நிலையில் மாற்றத்தினை கொடுக்கும் ஆலயமாகவும் ,நமது வீட்டில் பெண்மணிகள் மற்றும் பெண்குழந்தைகள் சிறப்பாக வாழ வணங்க வேண்டிய ஆலயம்.

 

அருங்கரை அம்மன் ஆலயம்,
அருங்கரை அம்மன் ஆலயம்,

ஆலய தொடர்பு:வெள்ளகோயில்மற்றும் சின்னதாராபுரம்,கருர்  நகரின் அருகே 25 கிமி தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

 

Kongu Vellala Gounder an ancient division of Tamilakam comprising Coimbatore, Erode, Salem and ancient Mysore region. 
People belonging to the same Kulam/Kootam usually will not intermarry. They are considered as brothers and sisters. Each Kulam/Kootam has its own Kulaguru and Kuladeivam or Ishta deivam. In temples, it is a common practice to pray their divine idols which is specific to a Koottam/Kulam.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)