வாஸ்துவில் மனையின் வடிவங்கள்

Vastu House Shape
Vastu House Shape

 

 

 

 

 

சதுர மனை :

நான்கு பக்கங்களிலும் சரியான அளவுகள் உடைய மனையே சதுர மனை என்று அழைக்கப்படுகிறது.திசைகாட்டும் கருவியை பார்க்கும்போது 22.5° க்கு மேல் திசைகளுக்கு திரும்பிய மனைகள் எதிர்மறை பலன்களை கொடுக்கும். ஆகவே காம்பஸ் வைத்து சரிபார்த்த பின்னர் கட்டிடங்களை கட்ட வேண்டும்.

செவ்வக மனைகள்:

நீளத்தில் அகலத்தை விட இரண்டு மடங்குக்கு மேல் இருக்கும் மனைகளே செவ்வக மனைகள் ஆகும்.
ஆனால் இந்த மனைகளும் 22.5° க்கு மேல் திசைகளுக்கு திரும்பி இருந்தால் சிறப்பானதல்ல. இது போல் அனைத்து மனைகளுக்கும் திசையானது 22.5° க்கு மேல் திரும்பியிருந்தால் தவிர்க்கப்பட வேண்டும்.

நான்கு மூலைகளும் இல்லாத மனை :

தவிர்க்கப்பட வேண்டிய
மனை மனையின் நான்கு மூலைகளும் வெட்டப்பட்டுள்ள மனையாகும்.இதனை ஆங்கிலத்தில் ஸ்ப்லே என்று அழைப்பார்கள்.இதனை சரி செய்ய முடிந்தால் கட்டிடம் கட்டலாம். இல்லையென்றால் தவிர்க்க வேண்டும்.

மத்தியப்பகுதி குறைந்த மனை :

நான்கு மூலைகளும் வளர்ந்து
மத்தியப்பகுதி குறுகி உள்ள மனை.இதனை உடும்பு மனை என்று அழைக்கிறார்கள். இதனையும் சரிசெய்வது நல்லது. இல்லெயென்றால் தவிர்க்க வேண்டும்.

முக்கோண மனை :

மனையில் ஒர் திசையில்லாமல் மற்ற
மூன்று பக்க திசைகளுடன் உள்ள மனை கண்டிப்பாக தவிர்க்கப்பட
வேண்டும். இதனையும் செவ்வக அமைப்பை ஏற்படுத்தி வீடு கட்ட வேண்டும்.

ஆறு பட்டை வடிவம் கொண்ட மனை :

ஆதனை ஆறுமுகம் மனை என்போம்.மனையின் அமைப்பு
ஆறு பக்கங்களை கொண்டது. எந்த பக்கமும் 90° டிகிரி இருக்காது.
அதைவிட குறைவாகவும் கூடவும் தான் இருக்கும் தவிர்க்கப்பட
வேண்டியது.இதில் கட்டிடங்களை கட்ட வேண்டாம்.

எண்கோண வடிவம் கொண்ட மனை :

மனையின் அமைப்பு
எட்டு பக்கங்களை கொண்டது.இதனை ஒரு வாஸ்துவில் அனுபவம் உள்ள வாஸ்துநிபுனர் துணை கொண்டு சரி செய்ய கட்டிடங்களை கட்ட வேண்டும். வாஸ்து மாற்றங்கள் செய்தால் பயன்படும் அமைப்புடையது சரியான வாஸ்துவின்படி வீடு அமைத்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

தென்கிழக்கு வளர்ந்த மனை :

தவிர்க்கப்பட வேண்டியது மனையின்
தென்கிழக்குப் பகுதியில் கிழக்குப் பகுதி பெட்டி போன்ற வடிவத்திலோ அல்லது
அகன்ற வடிவத்திலோ வளர்ந்திருந்தால் தவிர்க்கப்பட வேண்டும்.
அல்லது வாஸ்து விதிகளுக்கு பொருத்தம் செய்து உபயோகப்படுத்தலாம்.

மனையின் வடமேற்குப் பகுதிகள் வளர்ந்த மனை :

கண்டிப்பாக
தவிர்க்கப்பட வேண்டிய மனை.மேற்கு பகுதியில் வளர்ச்சி பெற்றால் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால் வடக்கு வளர்ச்சி பெற்றால் மிகப்பெரிய தவறு ஆகும். ஆனாலும் எந்தப்பகுதியும் வளரகூடாது.

தென்மேற்குப் பகுதியில் தெற்கு, மேற்கு, அதாவது தென்மேற்கு வளர்ந்த
மனை : இவை அனைத்தும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்

வட்ட வடிவ மனைகள் : கட்டிடங்களும் இடங்களும் வட்ட வடிவத்தில் இருப்பது. மிகவும் தவறு.இது ஆலயம் சார்ந்த
சம்பந்தப்பட்டவைகளுக்கு ஒர் சிறிய அளவு பொருந்தும். தவிர்க்கப்பட வேண்டிய மனை ஆகும்.

அரைவட்ட வடிவ மனைகள் :

காலிமனையின் அமைப்பு அரைவட்ட வடிவமாக
அமைந்த மனை கட்டாயமா தவிர்க்கப்பட வேண்டும்.

உடுக்கு மனை : மனையின் அமைப்பு உடுக்கு போன்ற அமைப்பு என்பது சரி செய்து இடத்தை கழித்து விட்டு கட்டவும்.

கோடாரி மனை;

ஒருசில கிலி இடங்கள் மனையின கோடாரி அமைப்பு
போன்று இருக்கும். இதுவும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய மனை ஆகும்.

கூம்பு வடிவ மனை :

மனையின் ஒரு பகுதி இருபுறமும் சரிவாக வளர்ந்த கூம்பு வடிவத்தில் காணப்படும். ஆனால் கூம்புப்பகுதி அமைப்பு அதிகமாக இல்லை என்றால் கோடிட்ட பகுதிக்கு மேல் விட்டு விட்டு மனையை சதுரமாக அல்லது செவ்வக அமைப்பிற்கு கொண்டு வந்து கட்டிடங்களை கட்டிக் கொள்ளலாம்.

சகட யோக மனை : T வடிவத்தை தலைகீழாக அமைப்பதைப் போன்ற
அமைப்புடைய மனை சகட மனை எனப்படும். இதனை இருபுறங்களிலும் இடம் வாங்கி கட்டிடம் கட்ட வேண்டும். இல்லையெனில் விற்பனை செய்து விடுதல் நலம்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.