பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்”

chennaivasthu
chennaivasthu

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்”

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்பது பழமொழி.

இதை நேர்மறையாக மாற்றினால் பணம் கொட்டும் இடத்தில் மேலும் மேலும் கொட்டும், வெற்றி மேலும் மேலும் வெற்றியையும், தோல்வி மேலும் மேலும் தோல்வியையும் இழுத்துக் கொண்டு வரும்.

நாம் பெறும் மிகச் சிறிய வெற்றிகூட நமக்கு வெற்றி மனப்பான்மையை உருவாக்குகிறது. அந்த வெற்றி மனப்பான்மை மேலும் பல வெற்றிகளை உருவாக்குகின்றன. அது போலவே தோல்வி, தோல்வி மனப்பான்மையை உருவாக்கி தோல்வியை இழுத்து வருகிறது.

பல வெற்றிகளை குவித்த வெற்றி வீரர்களின் முகத்தில் அந்த வெற்றியின் ரேகைகள் படர்ந்திருக்கின்றன என்கிறார் எமர்சன்.

அந்த வெற்றி ரேகைகள், அந்த வெற்றி நோக்கு மேலும் மேலும் வெற்றிகளை ஈர்க்கின்றன.
ஆக நாம் மிகுந்த முயற்சி எடுத்து வாழ்வில் சில வெற்றிகளை உருவாக்கிவிட்டால், அந்த வெற்றி தேவதை மேலும் பல வெற்றிகளை நம்மிடம் கொண்டு வருவாள்.
எதிர்பாராமல் சில தோல்வி நேர்ந்துவிட்டால் சற்று ஓய்வு எடுத்து நன்றாக சிந்தனை செய்து சில சிறிய காரியங்களை கையில் எடுத்து சிரத்தையோடு செயலாற்றி சில வெற்றிகளை பற்றிக் கொண்டுவிட்டால் அப்போது மீண்டும் வெற்றி முகம் காட்டும்.

மழைக்கு முன் குளிர்ந்த காற்று வீசுவது போல முன்னேற்றம் வருவதற்கு முன் ஓர் உற்சாகமான மனநிலை வந்துவிடும்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு.
காற்று வீசினால் காற்றாடி சுற்றுகிறது. காற்றாடி சுற்றினாலும் காற்று வீசுகிறது. அதுபோல வெற்றி மகிழ்ச்சியை தருகிறது என்பது உலக விதி. மகிழ்ச்சியான மனநிலை வெற்றியை ஈர்க்கிறது என்பது ஆன்மீக விதி.
ஒரு வெற்றிக்காக இறைவனை வேண்டிய பின் அது கிடைத்தது போன்ற பாவனை செய்யுங்கள். அந்த வெற்றி கிடைத்த உடன் எத்தனை மகிழ்ச்சியோடு இருப்பீர்களோ அத்தனை மகிழ்ச்சியோடு இப்போதே இருங்கள். அந்த மனநிலை வெற்றியை இழுத்துக் கொண்டு வரும் என்பது ஆன்மீக ஞானிகளின் அறிவுரையாகும்.
மகிழ்ச்சியான மனநிலை வரும்போதுநமது வாழ்க்கையின் வெற்றிக்கதவு திறந்துகொள்கிறது.

மேலும் விபரங்களுக்கு,
#vastu_consultant_in_tamilnadu,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
இதைப்படிக்கும் உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனதுநெஞ்சார்ந்த நன்றிகள்.

ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: [email protected]

Leave a Comment