வாழ்க்கை செல்வம் செழிக்க என்ன செய்ய வேண்டும்?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/images.jpg

வாழ்க்கை செல்வம் செழிக்க என்ன செய்ய வேண்டும்?

படிக்க வேண்டிய நேரங்களில் அது தொழில் சார்ந்த கல்வியாக இருந்தாலும் வேறு எந்த கல்வியாக இருந்தாலும் முயற்சி செய்து படித்தால் வரும் காலங்களில் அதன் பலன் கை மேல் கட்டாயமாக கிடைக்கும்.
செய்யும் செயலை வேலையை நன்றாக செய்தால் அதற்கான பலன் நம்வீடு தேடி வரும்.

ஊக்கமும் அதன் பலனான விடாமுயற்சியும் எங்கு இருக்கிறதோ, அங்கே பணம் வழி கேட்டுக்கொண்டு வரும். யாரிடம் விடா முயற்சி இருக்கிறதோ அவரிடம் கடவுள் அருகிலேய இருகின்றார்.

“முயலும் வரை முயல்வதல்ல முயற்சி
முடியும் வரை இடைவிடாமல் முயல்வதே முயற்சி”

எங்கே இந்த விடா முயற்சி இருக்கிறதோ, அங்கே இருக்கும் வாசல் திறந்து கொள்கிறது.

“நிறைய வேலை செய்யாதீர்கள், ஆனால் நிறைவாக வேலை செய்யுங்கள் குறைவாக வேலை செய்யுங்கள், ஆனால் குறையில்லாமல் செய்யுங்கள்.”
அமைதியான மனதுடன் தெளிந்த சிந்தனையுடன் மிகுந்த நம்பிக்கையுடன் முக மலர்ச்சியுடன் அளவில்லா ஆர்வத்துடன் செய்யும் காரியங்கள் சிறக்கின்றன. சாதனைகளாகின்றன.

அநேகர் இந்த சம்பளத்துக்கு இந்த வேலை போதும், இந்த மனிதர் கொடுக்கும் பணத்துக்கு இந்த அளவு வேலை செய்தால் போதும் என்று தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள். இப்படி செய்வதால் அவர்களது தரம் தானாக கீழே இறங்குவதை அவர்கள் அறிவதில்லை.
ஆரம்ப காலங்களில் ஊதியம் குறைவாக இருந்தாலும், அதனால் நாம் சிரமப்பட்டாலும் தப்பில்லை. நம் தரம் மட்டும் எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது.

ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்கு இசை அமைக்கும் முன் விளம்பரங்களுக்கு இசை அமைத்தார். சின்ன விளம்பரம் தானே என்று நினைக்காமல் அதையும் சிறப்பாக செய்தார். அந்த சிறிய விளம்பரங்களில் தன் முத்திரையை பதித்தார். அது மிகச் சிறப்பாக இருப்பதை கண்டு மணிரத்னம் அவரை ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் அவர் தன் தளரா முயற்சியில் உலகளாவிய சாதனை படைக்கிறார்.

சரவண பவனில் ஆரம்ப காலங்களில் கையைக் கடித்தாலும் பரவாயில்லை என்று குறைந்த விலைக்கு உணவுகளை வழங்கிய போதுகூட சுவையிலும் சுத்தத்திலும் எந்த குறையும் வைக்கவில்லை. இதனால் ஆரம்ப காலங்களில் அவருக்கு தினமும் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. காலம் செல்ல செல்ல சரவண பவனின் சுத்தமும், சுவையும் யாவரையும் கவர்ந்தது. இன்று அதன் சாதனை உலக புகழ் பெற்று விளங்குகிறது.

ஜெப்ரி ஆர்ச்சர், சிட்னி செல்டன் போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை சுமாராக 1௦ தடவைக்குக மேல் திருத்தி திருத்தி எழுதுவார்களாம். அதனால் அவர்கள் கதைகள் முதன்மை கதைகள் ஆனது.

சில வேளைகளில் நம் செயல்கள் சிறப்பாக இருந்தாலும் சாமானியர்கள் அதன் மதிப்பை உணராதவர்களாக இருப்பார்கள்.
வைரத்திற்கும் சாதா கற்களுக்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ள முடியாத மாறுபட்ட மனிதர்கள் மத்தியில் நாம் அறிந்து கொள்ளப்படாமல் இருக்கலாம், உயர்த்தப் படாமல் இருக்கலாம்.
ஆனால் வைரத்தின் தன்மைகளை அறிந்த வைர வியாபாரியின் கண்களில் நாம் படும்போது உண்மையான நிலைக்கு உயர்த்தப்படுவோம். அந்த நாளில் நாம் வைரம் போல் ஜொலிப்போம்.

மேலும் விபரங்களுக்கு,
#vastu_consultant_in_tamilnadu,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
இதைப்படிக்கும் உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனதுநெஞ்சார்ந்த நன்றிகள்.

ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: [email protected]

Leave a Comment