வாஸ்து சாஸ்திரமும் மனித பிறப்புகளும்,

குழந்தை பிறப்பு வாஸ்து
குழந்தை பிறப்பு வாஸ்து

வாஸ்துவும்’ மனித பிறப்புகளும்

 

மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை நடைபெறும் பெயர்வைப்பு மற்றும் காதணி விழா முதல் திருமண விழா வரை பல்வேறு நிகழ்வுகளிலும் வாஸ்து,  சூட்சுமங்கள் இருக்கின்றன. 

  கர்ப்பிணிகள் வசிக்கக் கூடிய அறை, தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியாக அமைவது நல்லது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.  அறை சுவர்களில், குறிப்பாக இளம் நீலம், இளம் சிவப்பு மற்றும் இளம் சந்தனம் மற்றும் இளம் பச்சை, வண்ணங்கள்   இருக்க வேண்டும். குழந்தை பிரசவம். ஆன ஒரிரு மாதங்களில் குழந்தைகளின்ன்  தொட்டிலை வடமேற்கு மூலையில்  மட்டுமே அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.  தென்கிழக்கு பகுதியில் தொட்டில் இருக்கும் போது, குழந்தை உரிய நேரத்திற்குத் தூங்காமல், விழித்துக் கொண்டும், அழுது கொண்டும்  இருக்குமென  உறுதிபட கூறுகிறது.

 வடகிழக்கில் தொட்டில் அமைக்கும்போது குழந்தையின் வளர்ச்சி தடைபடுவதுடன் பல்வேறு பிரச்னைகளுக்கும்,  இன்னல்களுக்கும் அது ஆளாகும்.  அதுவே ஆண்குழந்தைகளாக இருக்கும் போது  படுக்கையறையில் கர்ப்பிணி படுக்கும் முறை என்பது மிகவும் முக்கியம். எப்போதும் வடக்கு அல்லது கிழக்கு பார்த்து படுக்க வேண்டும்.
 சோற்றுக்கற்றாழையை வேருடன் பிடுங்கி வடமேற்கு அல்லது தென்கிழக்கில்  தொங்கவிடும்போது மகப்பேறு அடைந்த தாயின் உடல்நிலையில் ஆரோக்கியம் சீரடையும். அதேபோல சுவர் ஓரங்களை மஞ்சள் நீரால் துடைக்கும்போது குழந்தையின் உடல் கழிவுகளான மலம் சீறுநீர்  மூலமாக வெளியாகும் கிருமிகளால் அவை உருவாக்கக்கூடிய நோய்களையும் நெருங்க விடாது காக்கும்.
 
ஆனால், அந்நாளில் வீட்டில் நடக்கும் பிரசவத்தில் தாய்-சேய் இருவரையும் வடமேற்கு மூலையில் தங்க வைப்பதால், மாலை சூரியனின் கதகதப்பு  இரவுவரை இருக்கும். காற்றும் அதிகம் வீசாது. இது தற்கால மருத்துவமனையில் இருக்கும் இன்குபேட்டரின் மென்மையான வெப்பநிலையை ஏற்படுத்துகிற அமைப்பாக இருக்கும்.

  பிறந்த குழந்தைகளுக்கு இதயத் துடிப்பு   வேகம் அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம் அது உடனே அடுத்தடுத்த வளர்ச்சிக்குத் தன்னைத் தயார் செய்து கொள்வதே ஆகும். இந்த காலகட்டத்தில் அதன் இதயத்  துடிப்பை சீராக்க உதவுகிறது அதன் இடுப்பில் கட்டப்படும் அரைஞாண் கயிறு. இடுப்பு அருகில் மட்டுமே ரத்த குழாய்கள் மெலிதாக தோலின் மிக அருகில்  செல்கின்றன. எனவே ஈரம்பட்டாலும் அறுபடாத பொருளான வெள்ளை எருக்கம் செடியின் நாரினை கயிறாக திரித்து அதைத்தான் இடுப்பில்  கட்டிவிடுவார்கள். ஆனால், நம் முதாதையர்கள், அவ்வாறு கட்டுவது பேய், பிசாசு, தீயசக்திகளை நெருங்கவிடாது இருப்பதற்காக என்ற ‘நம்பிக்கையை’  வளர்த்துவிட்டதால், அது வாஸ்து சாஸ்திர அறிவியல் ஒருவகை என்ற உண்மை மறைந்துபோனது.
 ‘வசம்பு’ என்ற மூலிகைக்கு கிராமங்களில் ‘பிள்ளை வளர்த்தி’ என்றே  பெயர். இதன் அடிப்பகுதி – வேர்பகுதி கட்டையாக இருக்கும். இதனை சிறு சிறு மணிகளை போல செய்து நூலில் கோர்த்து வளையல் போல  குழந்தைகளின் கைகளில் அணிவிப்பார்கள். இது என்ன அலங்காரம்? இது அலங்காரம் அல்ல.  பொருள் சார்ந்த வாஸ்து அறிவியலே ஆகும்.  வசம்பு செடியின் வேர் மிக  வாசனையாக இருக்கும். இதன் மணத்தை 15, 20 அடி தூரம்வரையிலும் அதன் மணம் இருக்கும். குழந்தைகள் இயல்பாக கைகளை வாயில் வைத்துக்கொள்ளும்  பழக்கம் கொண்டிருக்கும். வசம்பு வளையல்களை குழந்தைகள் கையில் அணிவித்தால் அப்போது குழந்தையின் எச்சில் வசம்பில் பட்டு அதன் சாரம்  குழந்தை வாயிற்குள் செல்லும். 
 

Vastu-for-Children-room
Vastu-for-Children-room

ஆக குழந்தை அருந்தும் பால் செரிமானம் பலமணிநேரம் ஆகும். குழந்தையின் ஜீரண சக்தியைத் தூண்டக்கூடிய மருந்தாக  பிள்ளை வளர்க்கும் மூலிகையான வசம்பு துணை புரிகிறது.   நாம் இன்றைக்கு ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பொருட்களையே அதிகம் பயன்படுத்துகிறோம். பழங்காலங்களில் மண்பாண்டம், செம்பு, பித்தளை வெங்கல பொருட்களையே அதிகம் பயன்படுத்தி வந்தோம். நாளாவட்டத்தில்  அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீலுக்கு (துருப்பிடிக்காத இரும்பு) மாறிவிட்டோம். இதனால் நோய்களே அதிகமாகின்றன.
ஆனால், முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு நம் உடலில் உலோக சத்தினை அதிகரித்து திறம்பட செயலாற்றி நம் ஆரோக்யத்தை மேம்படுத்தியது.  செம்பு மற்றும் காப்பர் கம்பிகளால் செய்த வளையல், கைக்குழந்தையின் கை, கால்களில் அணிவிக்கும்போது அக்குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  வாஸ்து அமைப்பில் உலோகம் என்றுமே நன்மை அளிக்கும். அந்த வகையில் கதவுகளுக்கு பித்தளை தாள் அமைப்பு ஏற்படுத்துகிறோம்.அதனால் தீய சக்திகள் வீட்டில் அண்டவிடாது தடுக்கும்.  இதனால் உலோகம் வாஸ்துவில் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)