அர்த்தனரிஸ்வரர் ஆலயம், திருச்செங்கோடு,

கொடிமாடசெங்குன்றூர் ஆலயம்

 

Tiruchengode
Tiruchengode

உலகில் எங்கும் இல்லாத அமைப்பில் பாடல்பேற்ற தலமான இங்கு அம்மையும் அப்பனும் இணைந்த கோலத்தில் இங்கு மட்டுமே.இவ்வாலய மலையின் உயரம் 1900 அடிகள் ஆகும்.மலையில்  ஏற படிகள் உண்டு.அவைகளின் எண்ணிக்கை1200 ஆகும்.
சிவன் ஆலயங்களில் லிங்க அமைப்பு உண்டு இங்கு மலையே லிங்க அமைப்பாக உள்ளது .அதனால் மலையை பகவானாக பாவித்து வழிபடும் போது மிகப்பெரிய பலன்களை அனுபவிக்க முடியும்.
தல வரலாறு:

 

பிருங்கி முனிவர் கயிலாயம் வரும் வேலையில் சிவபெருமானை மட்டுமே வலம் வந்து வழிபடுவார்.அம்மையை கண்டு கொள்ளமாட்டார்.இதனால் கோபப்பட்ட அம்மை என்னை மதிக்காமல் சென்றதால்,நீர் சக்தி இழந்து விடுவீர்கள். என்று சாபம் இட்டார்கள்.  இதனை அறிந்த சிவன் நானும் சக்தியும் ஒன்றுதான்.சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று தன் இதயத்தின் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார்.அப்படி பிருங்கி முனிவருக்கு காட்சி கொடுத்த அமைப்பில் பூகோலத்திலும் வந்து அமர்ந்து கொண்ட தலங்களில் இந்த தலம் முதன்மையானது ஆகும்.திரு என்றால் அழகு ,செங்கோடு என்றால் சிவந்த மலை . அழகு நிறைந்த சிவப்பான மலை திருச்செங்கோடு என பொருள் கொள்ளலாம். கொங்கு நாட்டில் மலை மீது அமைந்திருக்கும் சிவத்தலம் ,

ஆலய பலன்கள்:

 

arthanareeswarar
arthanareeswarar

விரைவில் திருமணம் நடக்கவும்,பிரிந்து வாழும் கணவன் மனைவி சேர்ந்து வாழும் அமைப்பை கொடுக்கும் தலமாகவும்,மேலும் மிகச்சிறப்பானதுஒரு அமைப்பாக இங்கு உள்ழ தேர் திருவிழா தரிசனம் செய்யும் பௌது அடுத்த தேர் வரும் போது குழந்தை பாக்கியத்தை கொடுக்கக்கூடிய தலமாக இவ்வாலயம் உள்ளது. சம்மந்த பெருமானாலும்,அருணகிரிநாதரால் அதிக பாடல் பெற்ற தலமாக இங்கு உள்ள செங்கோட்டு வேலவர் விழங்குகின்றார்.கொங்கு நாட்டில் செங்கோட்டையன் என்று பெயர் ஒருவருக்கு இருக்கின்றது என்றால் இப்பெருமானை வேண்டி தவமிருந்து அம்மாக்கள் பெற்ற பிள்ளைகளுக்கு தான் அப்பெயர் இருக்கும்.
வழி:
ஈரோடு மற்றும் சேலம் நாமக்கல் இடையில் இந்த ஆலயம் உள்ளது. தேவார பாடல் பெற்ற தலங்களில் 208 வது தலமாக விளங்குகிறது.

முக்கிய தகவலாக ஆலயம் காலை 6மணி முதல் மாலை 6மணிவரை மட்டுமே திறந்து இருக்கும். அந்த நேரம் பார்த்து செல்ல வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)