வீடு கட்ட வாஸ்து நாட்கள் பற்றிய விபரங்கள்

pudhu plot chennai vastu
pudhu plot chennai vastu

வாஸ்து நாட்கள்

நாம் வசிக்கும் மனை  எப்படி அமைய வேண்டும், அங்கு காற்றும்  ஒளியாகிய வெளிச்சமும் எந்த பகுதியில் நுழைந்து அங்கு வாழும் உயிர்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் சொல்வது தான் வாஸ்து சாஸ்திரம். இது தமிழில் மனையடி சாஸ்திரம் என்று சொல்லப்படுகிறது. இக்காலத்தில் இதனை வேண்டாம் என்று சொன்னால் மிகப்பெரிய தவறு ஆகும். எனெனில் இநாத மனையடி சாஸ்திரத்தின் வழியாகவே,வீட்டில் அனைத்து போகங்களையும் கொடுக்கும் பதினாறு மனை பொருத்தங்களை இணைக்கும் ஆயாதி கணித வாஸ்து உள்ளது.
ஐந்து நிலைகளில் உள்ள பஞ்ச பூதங்களும் ஒருங்கிணைந்து ஒரு நிலத்தை வளமிக்கதாக மாற்றி அங்கு வாழும் உயிர்களை ஆசிர்வதிப்பதை எடுத்து சொல்வதே வாஸ்து. சூரியனை அடிப்படையாக கொண்ட இந்த வாஸ்து சாஸ்திரத்தின் நாயகன் சூரிய பகவான். அவர் மூலமாக ஒரு இடத்தில் 64  பகுதிகளையும் ஆளக்கூடிய தகுதி உள்ளவர் வாஸ்து பகவான் ஆவார். ஆண்டின் எல்லா நாட்களும் ஒளிவீசி பூமியில் தனது ஆதிக்கம் செலுத்தும் இந்த சூரிய பகவான், ஒரு  எட்டு நாட்கள் நனது பொறுப்பை வாஸ்து பகவானிடம் வழங்கி விடுகின்றார். ஆக வருடத்தில் எட்டு நாட்கள் மட்டுமே விழித்து இருந்து வாஸ்து நாள் என அருளாசி செய்வார். இந்த எட்டு நாட்களே வாஸ்து நாட்கள் எனப்படுகிறது. அந்த நாளில் தொடங்கப்படும் எந்த கட்டிட வேலைகளும் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.

 

அந்த வகையில் பின்வரும் நாட்கள் வாஸ்து நாட்கள் ஆகும்.

சித்திரை 10-ம் தேதி, 

வைகாசி 21-ம் தேதி,

 ஆடி 11-ம் தேதி, 

ஆவணி 6-ம் தேதி, 

ஐப்பசி 11-ம் தேதி, 

கார்த்திகை 8-ம் தேதி, 

தை 12-ம் தேதி, 

மாசி 22-ம் தேதி,

ஆகிய இந்த எட்டு நாட்கள் தான் வாஸ்து நாட்கள் எனப்படுகிறது. 
 நேரம் வாஸ்து பூஜைகள் செய்ய நல்ல நேரம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே அன்பர்கள் இந்த நேரத்தில் வாஸ்து பகவானை மகிழ்விக்கும் விதமாக பூஜைகளை செய்யலாம். புதிய அல்லது மறுசீரமைப்பு கட்டிட வேலைகளை தொடங்கலாம். ஏனது ஆராய்ச்சி படி இந்த நாட்கள் நல்ல தாராபலன் உள்ள நாட்களாக இருந்தால் மட்டுமே எடுத்து கொள்ளுங்கள். இல்லையெனில் இந்த நாளை விளக்கி விடுங்கள். இந்த வரிசையில் நமது ஜோதிடத்தில் இணைந்த வாஸாது சாஸ்திரம் தை மாதத்தை சூன்ய மாதம் என்கிறது.அதனால் அந்த வாஸ்து நிள் நன்றாக எந்தவித தோசங்களும் இல்லாத நாளாக இருந்தாலும், மனை கோளுவதற்கு உரிய நாட்கள் கிடையாது.

வீடு கட்ட வாஸ்து நாட்கள் பற்றிய விபரங்கள்
வீடு கட்ட வாஸ்து நாட்கள் பற்றிய விபரங்கள்

என்னைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருந்தால் மட்டும் வாஸ்து நாளில் வீடு கட்டத் தொடங்கும் பூஜை போடுங்கள் இல்லையெனில் இந்த நாட்களை தவிர்க்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)