பணத்திற்கு தட்டுப்பாடே வராமல் இருக்க என்ன வழிகள் உள்ளன?

Ways to get out of money shortages vastu
Ways to get out of money shortages vastu

பணத் தட்டுப்பாடு நீங்க வழிகள்

ஒரு மனிதனுக்கு பணமே வாழ்க்கையாகிவிடுவதில்லை. ஆனால், பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே கிடையாது.. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அதுதான் உண்மை. இந்தப் பணத்தைப் பெறத்தான் நாம் அல்லும் பகலும் அயராது பாடுபடுகின்றோம். ஆனாலும், அனைவரது கைகளிலும் பணம் அவ்வளவு எளிதாகக் கிடைப்பது கிடையாது. பணம் நம் தேவைகளுக்கு தகுந்தாற் போல் நம் கைகளில் புழங்க வேண்டுமானால்,   வாஸ்து அமைப்பில் ஒரு வீடு கட்டாயமாக இருக்க வேண்டும்.
மகாலட்சுமி தனக்கு முன்பாகச் செல்வத்தைக் கொட்டி வைத்திருக்கின்றாள். ஆனால், அவளுடைய அருளால் அதை நாம் எப்படிப் பெறுவது என்பதில்தான் நமக்குக் குழப்பம். இங்கேதான் நமக்கு வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.

வடமேற்கில் வடமேற்கு அறைகளகல்  பீரோ, பணப்பெட்டி முதலியவை இருந்தால், பணம் வருவதும், போவதுமாக இருப்பதுடன், சேமிக்க முடியாததுடன் கடன்காரனாகவும் மாற்றி துன்பப்பட வைக்கும்.
தென்கிழக்கில் பணப்பெட்டி இருக்குமேயானால், விரயச் செலவுகளையும், கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காத தன்மையையும் ஏற்படுத்தும். ஏமாற்றப்படுவார்கள்.
கிழக்கில் பணப்பெட்டி இருந்தால் பணம் பல வழிகளில் வந்தாலும், நோய்க்குச் செலவு செய்வதில் பெரும்பகுதியும், குழந்தைகளின் தவறான செயல்களினால் பெரும்தொகையுமாக வீண் செலவுகளை ஏற்படுத்தும். 

மேற்குப் பார்த்த வீடுகளில் கிழக்குச் சுவர் சார்ந்து, மேற்குப் பார்த்து பீரோ இருக்குமேயானால், ஆண்கள் தேவையற்ற வீண்செலவுகளைச் செய்வார்கள். ஆண்களுக்கு நோய்க்கான செலவுகள் உண்டாகும்.
கிழக்குப் பார்த்து பணப்பெட்டியை வைத்தால், மகிழ்ச்சியான செலவுகளைத் தந்து, நிம்மதியையும் சந்தோசத்தோடு, லாபத்தையும் தரும். கட்டாயம் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். நல்ல நிகழ்வுகள் ஒரு இல்லத்தில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.

Ways to get out of money shortages vastu
Ways to get out of money shortages vastu

வீட்டின், தென்மேற்குச் சார்ந்த மூலை (நைருதி மூலை – குபேர மூலை என்று சொல்லப்படும்)யில் பணப்பெட்டியை வைத்தால், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பதுடன், பல தேவைகளைச் சிந்தித்து அதற்கேற்ப நல்ல செலவுகளை கொடுக்கும் அமைப்பாக இருக்கும்.

குபேர பகவான் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவருக்கு வடக்கு என்ற பழமொழியே உருவானது.

பணத் தட்டுப்பாடு நீங்க வழிகள்
பணத் தட்டுப்பாடு நீங்க வழிகள்

குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.அப்படி குபேரன் இல்லாத ஊரில் இருந்தால் அவரின் தோழரான சிவபெருமானை வணங்கி அனைத்து செல்வங்களும் பெற்று வாழுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.
Awww.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)