2021 to 2022 குரு பெயர்ச்சி பலன்கள் கும்பராசி, guru peyarchi 2020 to 2021 in tamil

கும்பராசி மக்களுக்கான குருபெயர்ச்சி சார்ந்த பலாபலன்களை தெரிந்துகொள்வோம்.
இதுவரையில் விரயத்தில் இருந்து மிகப்பெரிய கஷ்டத்தைக் கொடுத்து வந்த குரு பகவான் இப்பொழுது ஜென்ம ராசிக்கு சென்றிருக்கின்றார்கள். ஜென்ம குரு என்பது கஷ்டத்தை கொடுத்தாலும் கூட, இருந்த கஷ்டங்கள் இந்நிலையில் பாதிக்கிணறு தாண்டிய நிகழ்வாக வாழ்க்கையில் இருக்கும். இதனால் கும்பத்தில் தற்போது இருப்பது நல்லது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆக இதுவரை நீண்ட நாட்களாக இருந்த வழக்கு, வம்பு சார்ந்த விஷயங்கள் இப்பொழுது ஒரு முடிவுக்கு வரக்கூடிய காலகட்டத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். இதுவரை எதிரியாக இருந்தவர்கள் சமாதானத்திற்கு வரக்கூடிய ஒரு நிகழ்வு இந்த காலகட்டத்தில் நடக்கும். பணம் சார்ந்த நிகழ்வுகளில் இதுவரை விரய ஸ்தானத்தில் இருந்து விரயம் சார்ந்த நிகழ்வுகளை கொடுத்த நிலைமாறி இப்பொழுது, செலவுக்குத் தகுந்த ஒரு வருமானம் வரக்கூடிய நிலை கொடுக்கும். சேமிப்பு என்கிற ஒரு நிலை இல்லாமல் இருந்தாலும், அன்றாட செலவுகளுக்கு கடன் வாங்காமல் இருக்கும் என்கிற நிலை மாற்றி வைக்கும் நிகழ்வாக இந்த ஜென்ம குரு கண்டிப்பாக கொடுப்பார்கள்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கஷ்டகாலம் விலகி , ஒரு சந்தோசமான நிகழ்வை கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதுவரை குடும்பத்தில் பிரிந்திருந்த மக்கள், கணவன் ஒரு இடத்திலும், மனைவி வேறொரு இடத்திலும், இரண்டு ஊர்களில் வேலை செய்து வந்தவர்கள் இப்பொழுது ஒரே இடத்தில் கூடுகின்ற, ஒரே இடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கின்ற நிகழ்வாக இந்த குரு பெயர்ச்சி இருக்கும். கல்வியைப் பொறுத்த அளவில் மாணவ மாணவருக்கு இதுவரை ஆன்லைன் சார்ந்த வகுப்புகளில் மிகவும் சிரமப்பட்ட மாணவ-மாணவியர் இப்பொழுது, ஆசிரியர்கள் துணையோடு நல்ல ஒரு தெளிவான நிலையைப் பெறுவார்கள் . இதுவரை புரியாமல் இருந்த கல்வி என்பது கூட புரியும் நிலைக்கு உங்களை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும். உடல்நிலை சார்ந்த நிகழ்வுகளில் உணவு பழக்கவழக்கங்கள் கண்டிப்பாக கட்டுப்பாடு என்பது அவசியம். எப்பொழுதுமே பசியாக இருக்கும் பொழுது சாப்பிட வேண்டும். இந்த இடத்தில் வேலைக்கு வேலை மூன்று வேளை நாம் கண்டிப்பாக உணவு என்கிற விஷயத்தை தவிர்த்து, பசித்தால் மட்டுமே வேலைக்கு வேலை என்கிற உணவு நிலைக்கு நீங்கள் மாறும் பொழுது, இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மையை செய்யும். அதனை தவிர்த்து பசிக்காத போது உணவு அருந்தினால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு கொடுக்கும். தொழில் சார்ந்த நிகழ்வுகளில் சொந்தமாக தொழில் செய்பவர்கள் இதுவரை சந்தித்த கஷ்டங்களை கொஞ்சம் விலக்கி வைக்கும் நிகழ்வாக இந்த குருபெயர்ச்சி இருக்கும். ஒரு சில மக்களுக்கு அலைச்சல் அதிகமாக இருந்தாலும் எதிர்பார்க்கும் லாபம் நிச்சயமாகக் கிடைக்கும். கூட்டுத் தொழில் என்பது லாபத்தை கொடுக்கிற நிகழ்வாக இருக்கும். அதேபோல குரு  விரையம் சார்ந்த இடத்தில்  அமர்ந்து தொழில் சார்ந்த நிகழ்வுகளில் நிறைய மறக்க முடியாத அனுபவங்களை பாடங்களாக கற்றுத் தந்திருக்கிறார். அதை நினைவுபடுத்தி மீண்டும் அந்த தவறுகள் நடக்காத ஒரு படிப்பினையை கொடுக்கின்ற ஒரு பயிற்சியாக இந்த ஜென்ம குரு கும்பராசி மக்களுக்கு வழங்குவார்கள்.

எது எப்படி இருந்தாலும்,ஜன்ம ராமர் வனத்திலே சீதையை விடுத்ததும், என்கிற புலிப்பாணி சித்தர் பாடலை கவனத்தில் கொண்டு இந்த குருபெயர்ச்சி மாறும் வரை  வாழ்வில் தினமும் நடக்கும் ஒவ்வொரு செயலையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.மீண்டும் அடுத்த மீன ராசி  குரு பெயர்ச்சி பலன்களை தெரிந்து கொள்வோம்.