குருவின் காரகங்கள்

ஜோதிடத்தில் மிக அற்புதமான கிரகம். வழிகாட்டியாக இருக்க கூடிய கிரகம் என்று குருவை சொல்வார்கள். சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கிரகம். அந்த வகையில் பெரிய மனிதத் உடல் காரணமாக இருக்கக் கூடிய கிரகம். குருவின் காரகங்கள் என்று பார்க்கும் பொழுது, மற்றவர்களால் மதிக்கப்பட தன்மை. மற்றவர்களால் வரக்கூடிய தன்மை . சாந்த குணங்கள். பண்பான வாழ்க்கை. நீதிமான்கள். நீதியோடு வாழ்தல். நேர்மையாக வாழ்தல். தர்மசிந்தனை. ஒழுக்கத்தோடு வாழ்தல். கட்டுப்பாடுகளோடு வாழ்தல். பிறருக்கு நல்ல ஆலோசனைகளை கொடுத்தல். மற்றவர்களை மதித்து வாழ்தல். தெய்வ நம்பிக்கை போன்ற குணங்களுக்கு காரகம் குரு ஆவார். குரு ஆசிரியர்களுக்கு காரகம். இறைவனை சுட்டிக்காட்டுவதற்கு  காரகம். ஆன்மீகத்திற்கு குரு காரகம். மடாதிபதிகளும், தெய்வ பணிகளுக்கு குரு காரகம். ஞானிகளுக்கு ஒரு காரகம். பேரின்ப ஆன்மீகத்திற்கு குரு காரகம். தான தர்மங்களுக்கு குரு காரகம். பொதுப் பணம், பொதுமக்களின் பணத்திற்கு குரு காரகம். தனக்குச் சொந்தமில்லாத பெரிய அளவில் பணத்திற்கு குரு காரகம். அரசாங்க கருவூலம் குரு காரகம். வங்கியில் பணம் குரு காரகம். தானதர்மம் செய்பவர்கள் குரு காரகம்உயர்ந்த குணநலங்கள் கொண்ட சாந்தம், பண்பாடு, நீதி, நேர்மை, உண்மை, தர்ம சிந்தனை, பிறருக்கு நல்ல ஆலோசனை தருதல், மற்றவரை மதித்தல், தெய்வ நம்பிக்கை, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு

. பெறும் தனவான்களுக்கு குரு காரகம். மனதில் எந்த வஞ்சக நிலை இல்லாதிருப்பது, சூதுவாது, துரோகம் இல்லாமலிருப்பது, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லக் காரணமாக இருப்பது, குழந்தைக்கு காரகம். குழந்தைகள் உருவாக குரு காரகம். மஞ்சள் நிறத்திற்கு குரு காரகம் . எல்லாவித சுப நிகழ்ச்சிக்கு குரு காரகம் . ஆண் பெண் இருவருக்கும் களத்திரகாரகனாக இல்லாவிட்டாலும், குரு பலம் என்பது கோச்சாரத்தில் குரு இருக்க வேண்டும். உலோகங்களில் மஞ்சள் நிறம் தங்கத்திற்கு காரகம். சட்டம் ஒழுங்கு நீதிபதி, நீதிமன்றம் போன்றவற்றிற்கு காரகம். பெரிய விஷயங்களுக்கு குரு காரகம். வயிற்றுப்பகுதிக்கு குரு காரகம். உடலில் உள்ள கொழுப்புச் சத்திற்கு குரு காரகம். பூர்வீக ஆச்சார பாரம்பரிய விஷயங்களுக்கு குரு காரகம். புரோகிதம் குரு காரகம். மத நம்பிக்கைக்கு குரு காரகம். கோயில் விஷயங்களுக்கு குரு காரகம். சாஸ்திர, மந்திர உச்சாடணத்திற்கு குரு காரகம். கல்வி நிறுவனங்களுக்கு குரு காரகம்.  கருவூலம் வங்கி சார்ந்த நிகழ்வுக்கு குரு காரகம். தெய்வங்களில் தென்முகக் கடவுளாக இருக்கும் தட்சிணாமூர்த்தி கடவுள். விலங்குகள் பெரிய உருவமாக இருக்கும் யானை.ஆக மேற்கூறிய விசயங்களை ஆதிக்கம் செலுத்தும் கிரகமாக குரு இருக்கிறார். கிரகங்களில் சுப தன்மை கொண்டதாக குரு பகவான் இருந்தாலும் , ஒரு ஜாதகத்தில் குரு என்பவர் 2,4,6 10 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது பணம் பெருக கூடிய நிலையை கொடுப்பார் . அதே குருபகவான் 5 , 9 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது, கடன் கேட்டால் கடன் கிடைக்கும். வேலையில்லாத ஒரு மனிதனை உருவாக்குவார் . அதே 1, 3 , 7, 11 பாவங்களை குரு தொடர்பு கொள்ளும்பொழுது நடுத்தர வாழ்க்கையும், 8 ,12 பாவங்களை தொடர்பு கொள்ளும்போது எதிரிடையான கஷ்டப்படும் வாழ்க்கையும் ,குருபகவான் கொடுப்பார். இது அதன் திசா புக்தி காலங்களில் இந்த வேலையைச் செய்யும்.