மேற்கு பார்த்த வீடுகள் வாஸ்து | vastu for west facing

மேற்கு பார்த்த வீடுகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது மிகச் சரியான அமைப்பில் அமைக்க வேண்டும். அதனை மாற்றி அமைப்பீர்கள் என்று சொன்னால், வாஸ்து ரீதியாக தவறான வீடாக மாறிவிடும். அது பற்றி தெரிந்து கொள்வோம்.

மேற்கு பார்த்த வீடுகளில் தலைவாசல் என்பது வடக்குப் பகுதியில் அமைப்பது சிறப்பு. இல்லை என்று சொன்னால் மேற்கு பகுதியில் தலைவாசல் வைக்கும் பொழுது, அதற்கு எதிர்ப்புறம் கிழக்கு பகுதியிலும் கட்டாயமாக தலைவாசல் வேண்டும். மேற்குப் புற வீடுகளில் கார் நிறுத்துவதற்கு போர்டிகோ அமைப்பை இல்லத்தின் வடமேற்கு வெட்டுப்பட்ட அமைப்பில் எக்காரணம் கொண்டும் அமைக்கக்கூடாது. மேற்கு பார்த்த வீடுகளில் பால்கனி அமைப்பு என்பதும், படி அமைப்பு என்பதும், மேற்கு புறத்தில் இருக்கிறது என்றால், கட்டாயமாக கிழக்கு புறத்திலும் பால்கனி அமைப்பு வேண்டும். கண்டிப்பாக இந்த விதிகள் இருந்தால்தான் மேற்கு புற வாசல் வீடு, மேற்கு பார்த்த வீடுகள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.