வாஸ்துப்படி எப்படி கழிவறை வைப்பது?/Vastu Tips for Bathroom

நண்பர்களுக்கு வணக்கம். வடமேற்கில் கொஞ்சம் இடம் தான் இருக்கிறது 8 அடி அகலம் இருக்கிறது. அதில் எப்படி கழிவறை வைப்பது?எப்படி கழிவு நீர் தொட்டி அமைப்பது? கழிவுநீர் தொட்டிக்கு ஐந்து அடிகள் வேண்டும். கழிவறைக்கு ஐந்து தொட்டிகள் வேண்டும்.இக இருப்பதே எட்டு அடிகள் தானே என்ன செய்வது என்கிற கேள்விகள் இருக்கும். என்னை பொறுத்தவரையில் கழிவறைகளை மேலாக கழிவுநீர் தொட்டி கீழாக வைத்துக்கொள்ளலாம். அப்படி அமைக்கின்ற இடங்களில் தான் வாஸ்து ரீதியாக நல்ல வேலை செய்யும் என்று சொல்லுவேன்.அந்த இடத்தில் தரைக்கு மேலே உயரமாகவும்,தரைக்கு கீழே பள்ளமாகவும் ஒரு நிலை ஏற்பட்டு, ஒரு எதிர் நிலை,உயர் நிலை இல்லாமல் சமநிலைக்கு வந்துவிடும். இதுவே வாஸ்து விசைப்படி சரியான அமைப்பு.தனியாக கழிவறை வேறுஇடத்திலும்,கழிவுநீர் தொட்டி வேறுஇடத்திலும், அமைப்பது இரண்டாம் பட்சம்தான்.