வீட்டில் காம்பவுண்ட் சுவர் வாஸ்து

வீட்டில் காம்பவுண்ட் சுவர் என்பது தெற்கு மேற்கு காம்பவுண்ட் சுவர் உயரம் அகலம் அதிகமாக இருப்பது நல்லது. வடக்கு கிழக்கு காம்பவுண்ட் சுவர் உயரம் அகலம் குறைவாக இருப்பது நல்லது. கிழக்கு வடக்கு வடகிழக்கு பகுதிகளில் காம்பவுண்ட் சுவர் என்பது தலை தெரியும் அளவுக்கு அமைக்க வேண்டும். தெற்கு மேற்கு காம்பௌண்ட் சுவர் அமைப்பு என்பது நமது தலையை மூடிய அமைப்பிலும் அமைப்பது தவறு கிடையாது . கிழக்கு வடக்கு சுவர் மேல் பாகம் ஜாலி அல்லது இரும்பு கிரில் அமைத்துக்கொள்ளலாம் . தெற்கு மேற்குப் பகுதியில் மூடப்பட்ட உயர மதில் சுவர்களை அமைத்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் காம்பவுண்ட் சுவர் என்பது ஒரு இல்லத்திற்கு வடக்கும் கிழக்கும் தனியாக இருக்க வேண்டும்.

காம்பவுண்ட் சுவர் மட்டும் அமைத்து கட்டிட வேலையை தொடங்க கூடாது. எப்போது அந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று சொன்னால், தெற்கு மேற்கு பொறுந்தாத வாஸ்து இருக்கும்போது செய்ய வேண்டும்.

காம்பவுண்ட் சுவரில் உயரமான லைட் அமைப்புகள் வேண்டாம்.காம்பவுண்ட் சுவர் அமைப்பதற்கு கருங்கல் பயன்படுத்தலாமா என்றால்? தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். தெற்கு மேற்கு பகுதிகளில் கருங்கல் சுவர் உபயோகிக்கலாம். வடக்கு கிழக்கு பகுதிகளில் செங்கல் மூலமாக அமைப்பது நல்லது. தெற்கு மேற்கு பகுதிகளில் காம்பவுண்ட் சுவர் உயரமாக அமைத்து  வீட்டுமாடி அளவு வரை மூடுவதை தெற்கு மேற்கு பகுதிகளில் அமைத்துக்கொள்வது நல்லது.