வீட்டின் வெளிப்பகுதி,மனைக்கு வெளிப்பகுதிகள் வாஸ்து அமைப்பு

வீட்டின் வெளிப்பகுதி வாஸ்து
வீட்டின் வெளிப்பகுதி வாஸ்து

வீட்டின் வெளிப்பகுதி

வடக்கு, கிழக்கு காலியிடம் அதிகமாகவும், தெற்கு மேற்கு காலியிடம் குறைவாகவும் விடவேண்டும்.

வடக்கு கிழக்கு தாழ்ந்து தெற்கு மேற்கு உயர்ந்து வீட்டின் வெளிப்பகுதி இருக்க வேண்டும்.

செப்டிக் டேங்க் வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். அது சரியான அமைப்புடனும், கிழக்கு மேற்கு நான்கு பகுதியாக பிரித்து கிழக்கிலிருந்து மூன்றாவது பகுதியில் மேற்கிலிருந்து முதல் பகுதியில் அமைக்கப்பட வேண்டும்.

வீட்டின் செப்டிக் டேங்க், வீட்டின் சுவரையோ, சுற்றுச்சுவரையோ எந்த இடத்திலும் தொடக்கூடாது. அதேபோல வீட்டு சுவர் ஒரு பக்கமாகவோ, சுற்றுச்சுவர் ஒரு பக்கமாகவோ, அந்த கழிவறைத் தொட்டிக்கு சுவராக இருக்கக் கூடாது.

மனைக்கு வெளிப்பகுதிகள்

நமது மனைக்கு சுற்றுப்புற வெளிப்பகுதிகள் எப்படியென்று சொன்னால் வெளியே உள்ள தவறான தெருக்குத்து, பார்வை, தாக்கம், மற்றும் நமது மனைக்கு அருகில் உள்ள பள்ளம், மேடு, கிணறு, போர், குளம், குட்டை, ஆறுகள், கால்வாய்கள் போன்ற அமைப்புக்கள் சரியான இடங்களில் இருக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு சரியான வாஸ்து நிபுணர் நமக்கு அவசியம்.

தவறான குத்துக்கள் மேம்பாலங்கள், தாழ்வான பள்ளம், பாலத்தின் இறக்கம், பாலத்தின் மேடுகள், மேம்பால தூண் குத்தல், மலைமுகடு குத்தல், மற்ற மனைகளின் மூலைக்குத்தல், ஆலய குத்தல் போன்றவற்றை நாம் பார்;த்து அமைக்க வேண்டும்.

சுற்றுப்புற அமைப்பு என்று சொன்னால் நமது வீட்டின் அருகிலுள்ள காவல்நிலையங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், மதுபானக்கடைகள் போன்ற இந்த அமைப்புகளை நாம் ஆராய்ந்து நமது வீட்டை அமைக்க வேண்டும்.

அதேபோல அருகிலிருக்கும் ஆடு வெட்டும் கடைகள், அருகில் இருக்கும் சுடுகாடுகள், அருகிலிருக்கும் மிகப்பெரிய ஆலயங்கள் இவைகள் இருந்தால் இதனை நாம் அறிந்து அந்தப்பகுதியில் குடியிருக்க வீடு அமைக்க வேண்டும்.

காம்பவுண்ட்

வீட்டின் காம்பவுண்ட் கதவுகள் உள் நீக்குவதுபோல் அமைக்க வேண்டும். காம்பவுண்ட் மேற்கும் தெற்கும் உயரமாகவும் கனமாகவும் அமைக்க வேண்டும். வடக்கும் கிழக்கும் கனம் குறைவாகவும், உயரம் குறைவாகவும் அமைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வடக்கு கிழக்கு நமது காம்பவுண்ட் பொதுச்சுவராக இருக்கக் கூடாது. நமது காம்பவுண்டை தனியாகத் தான் அமைக்க வேண்டும். காம்பவுண்டில் அமைக்கக் கூடிய கதவுகள் உச்ச கதவுகளாக இருக்க வேண்டும். தவறான அமைப்பில் அமைக்கக் கூடாது.

 

fOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in chennai
vastu consultant in chennai

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்,