வீட்டின் சுற்றுச்சுவர்கள்.

compound wall rules
compound wall rules

வீட்டிற்க்கு சுற்றுசுவர் அமைப்பு மிகவும் முக்கியமானது. வாஸ்து அமைப்பு என்பதில் ஒரு வீட்டில் சுற்றுசுவர் இருக்கும் போது ஒரு வீட்டில் கட்டாயமாக எதிர்மறையான பாதிப் பிரச்சினைகள் இருக்காது. ஆக சுற்றுச்சுவரே ஒரு வீட்டின் பிரச்சனையை சரி செய்யும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
 வாஸ்து சாஸ்திர விதிகளின் படி வீட்டின் வெளிப்புற சுவரை தாய்சுவர் என்றும் சுற்றுச்சுவரை  தந்தை சுவர் என்றும் நாங்கள் அழைக்கின்றோம்.ஆக நம்முடைய தாய் தந்தையின் உரிமையை நாம் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா? அதுபோல  இந்த இரண்டு சுவர்களில் மற்றவர்களுக்கு பாத்தியம் இல்லாது நாமே தனியாக உள்ள உறுமையாளர்களாக இருக்கவேண்டும்.
நமது உடலை மறைக்க ஆடைகள் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒரு வீட்டில் சுற்றுச்சுவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆடை இல்லாத மனிதன் அரைமனிதன் என்போம் அதுபோல வீட்டில் சுற்றுச்சுவர் இல்லையென்றால் அந்தவீடும் அரைவீடுதான்.
 வீட்டிற்கு சுற்றுச்சுவர் என்பது என்பது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வருவது மிக முக்கியமானது. அதுவும் நம்முடைய தனிபட்ட முறையில் அமைத்த போதுவான சுற்றுச்சுவராக இருத்தல் கூடாது. இருப்பது சிறப்பு.  வீடு  முன்பே கட்டியிருந்து தெற்கு மேற்கு சுற்றுச்சுவருக்கு இடம் இல்லையெனில் தவறு கிடையாது. ஆனால் புதிதாக வீடு கட்டுகின்றோம் என்றால் அவசியம் சுற்றுச்சுவர் வேண்டும்.

வீட்டின் சுற்றுசுவர்கள்
வீட்டின் சுற்றுசுவர்கள்

வீட்டு இடத்திற்கு கிழக்கு பகுதியிலும் வடக்கு பகுதியிலும் அதிக காலியிடம் விட்டு சுற்றுச்சுவர் அமைப்பது நல்லது. ஆக நல்லது என்பதற்காக வடக்கு கிழக்கு பகுதிகளில் மிகவும் அதிக இடங்களாக இருப்பதும் தவறு இநாத இடத்தில் எவ்வளவு இருக்கவேண்டும் என்பதனை ஒரு வாஸ்து நிபுணர் கொண்டு முடிவு செய்வது நல்லது. மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குறைவான காலியிடம் விட்டு சுற்றுச்சுவரை அமைப்பது வாஸ்துப்படி நல்லது.
 காம்பவுண்ட் உயரத்தை பொருத்தவரையில் நான்கு திசையிலும் ஒரே சம அளவாக இருப்பதைவிட .  தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில்  உயரமாக அமைத்து,வடக்கு கிழக்கு கொஞ்சம் திழ்ந்த அமைப்பில் அமைக்க வேண்டும். வீட்டிற்கு சுற்றுச்சுவரின் உயரம் என்பது ஜன்னல் அளவிற்கு மேல் போகக்கூடாது. . பல இடங்களில் நான்  பார்த்தவகையில் காம்பவுண்டின் உயரம் ஜன்னல்களை முழுவதும் மறையும் அளவிற்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உயரமாக இருந்தால் நல்லது என்று அமைத்திருப்பார்கள்.இதுவும் தவறுதான்.எது எப்படியோ ஒரு நல்ல வாஸ்து நிபுணர் துணைகொண்டு வீடு வேலை செய்யும் போது எந்தவித தவறுகளும் இல்லாது அமைக்க முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)