வீடு கட்ட இடத்தின் மண் சுவையை இன்றைய நவின காலத்தில் எப்படி தெரிந்து கொள்வது?

asthivaram
asthivaram

ஒரு காலிஇடத்தை தேர்வு செய்ய முற்படும் பொழுதே அதில் உள்ள மண்ணை வைத்து அதாவது வாசனையை வைத்து இதில்  வீடு கட்டலாம் கூடாது என்று சொல்ல முடியும் என்று நூல்கள் சொல்கிறது.  ஆனால் இன்றைய நவின காலத்தில் இத்தனை துல்லியமாக நம்மால் கவனிக்க  முடியாது  ஆகவே ஒரு சில விவரங்களை வைத்து நாம் தெரிந்து வைத்து கொள்ள முடியும்.

 

இல்லத்தின் எதிரில் ஒற்றை பனைமரம், கிணறு, ஆலமரம், எருக்கன் செடி மற இல்லாமல் இருக்க வேண்டும். கோவில் கோபுரத்தின் நிழல், அல்லது ஸ்தூபியின் நிழலோ மனை மீது விழாத அமைப்பாக இருக்க வேண்டும்.இல்லத்தில் பாம்பு புற்று, ஆமையின் ஓடு, மனித சடலம் இருக்க கூடாது.

 

மகாவிஷ்ணு ஆலயத்தின் பின்புறம், சிவபெருமான் ஆலயங்கள் மற்றும் வினாயக பெருமான் ஆலயங்களின் முன் புறம் வீடு கட்ட கூடாது.  ஒரு வீடு மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல்வேண்டும்.இல்ல இடத்தில் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் இருக்க கூடாது.

வீடு கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல்  வேண்டும்.

 

வீடு கட்ட இடத்தின் மண்
வீடு கட்ட இடத்தின் மண்

பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு உள்ள வார சூன்யம் என்ற நாட்களில் மனை முகூர்த்தம் செய்ய கூடாது.  காலற்ற,  தலையற்ற, நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் வீடு வேலையோ தொடங்குவதை மற்றும் கிரகபிரவேசம் செய்வது கூடாது. அஸ்வினி ,ரோகினி, ஹஸ்தம், அனுஷம், திருவோணம், உத்திரட்டாதி, பூசம், ரேவதி, சதயம் நட்சரத்தில் செய்ய உத்தமம்  என்று நூல்கள் சொல்கிறது.நேத்திரம் இல்லாத குருட்டு நாட்களையும் தவிர்க்க வேண்டும்.