வாஸ்து பார்ப்பது/வாஸ்து படிப்பது

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எனது வாஸ்து பயணத்தில் வாஸ்து சார்ந்த ஒரு அறிவின் படி 11 வருடங்களாக வாஸ்து பார்த்து வருகிறேன். ஆகவே இதில் வாஸ்து என்பதனை படிப்பதைவிட மனிதர்களை படிப்பது தான் அதிகம். ஒருவரின் நடை, உடை பாவனையை வைத்து அவர்களுடைய வாழ்க்கையை சொல்ல முடியும். இந்த இடத்தில் அவர்கள் எதிரமறை நடைஉடையை மாற்றி அமைத்து கொண்டால் அவர்களுக்கும் வெற்றியே. அதுபோல அவர்கள் எந்த மாதிரி உடை அமைப்போடு இருக்கிறார்கள்? எந்த மாதிரி சிகை அலங்காரம் செய்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாகனங்கள் வைத்திருக்கிறார்கள்? வாகனங்களை எப்படி ஓட்டிச் செல்கிறார்கள்? எப்படி ஒருவரை வரவேற்கிறார்கள்?அவர்கள் கைகள் மற்றும் கால் அங்கங்கள் எந்தவித நடவடிக்கையை செய்து கொண்ட பழக்க வழக்கமாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு குழந்தைகள் எத்தனை? மாமனார் மாமியார் உடன் இருக்கிறார்களா? கணவர் எந்த மாதிரி இருப்பார்? மனைவி எந்த மாதிரி இருப்பார்? குழந்தைகள் இல்லத்திலிருந்து படிக்கிறார்களா? அல்லது விடுதியிலிருந்து படிக்கிறார்களா? இது சார்ந்த உளவியல் விஷயத்தை எடுத்துக்கொண்டு வீட்டின் வாஸ்து அமைப்பு சார்ந்த அமைப்பை எடுத்துக்கொண்டு,ஒருவரின் வாழ்க்கையை மாற்றி கொடுக்கும் போது மட்டுமே அவர்களுக்கு வெற்றி என்பது இருக்கிறது.

இந்த இடத்தில் நேராக சென்று சமையல் அறை இங்கே இருக்க வேண்டும். வரவேற்பறை இங்கு இருக்க வேண்டும். படுக்கை அறை எங்கு இருக்க வேண்டும்.கழிவறைகள் இங்கே இருக்க வேண்டும். என்கின்ற சொல்லுகின்ற வாஸ்து எனது பயணத்தில் கிடையாது. அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியே எனது பயணம்.

திருமணம் நடக்க வேண்டுமா ?…..

குழந்தை பிறப்பு பேறு கிடைக்க வேண்டுமா?…..

தொழில் சார்ந்த நிகழ்வுகள் வெற்றி வேண்டுமா ?…..

பணத்தோடு பலமாக வாழ வேண்டுமா?…..

அதனை சொல்லிக் கொடுக்கும் ஒரே பயணம் தான் எனது வாஸ்து பயணம். ஆகவே நான் சொல்லுகின்ற வாஸ்து மற்றும், உளவியல் சார்ந்த அறிவுரைகளை, ஆலோசனைகளை எடுத்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் உண்டு . அதனை ஏற்காத மக்கள் என்னை அழைக்க வேண்டிய அவசியம் கிடையாது. அப்படி அழைத்தால் எனக்கும் நேரம் விரையம்.அவர்களுக்கும் பணம் விரையம்.