வாஸ்து பயிற்சி வகுப்பு கட்டுரைகள்.

வாஸ்து
பயிற்சி வகுப்பு கட்டுரைகள்.

 

 

 

 

 

 

வாஸ்து சார்ந்த தொழில் என்பது அனைவருக்கும் சாத்தியம் ஆன தொழிலாக பார்ப்பது என்பது கடினமான பணி என்று தான் என்னைப் பொருத்தவரை சொல்லுவேன்.இந்த இடத்தில் வாஸ்துவிற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று என்னைப்போன்ற வாஸ்து நிபுணர்கள் கூறினாலும், ஆனால் கட்டாயமாக ஒருவர் வாஸ்து நிபுணராக மற்றும் ஜோதிட நிபுணராக வேண்டும் என்றால் கிரகங்கள் துணை இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட தொழில்களை பார்க்க முடியும்.இன்று தமிழகத்தில் வாஸ்து பயிற்சி வகுப்புகள் நடத்துகின்ற பல வாஸ்து நிபுணர்கள் மூலமாக பல வாஸ்து நிபுணர்கள் வலம் வந்து கொண்டு இருந்தாலும், இதில் முகம்தெரியும் வகையில் ஒருசிலர் மட்டுமே உள்ளார்கள்.குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் மக்களுக்கு மேல் வாஸ்து பயிற்சி கொடுத்த வாஸ்து குரு மூலமாக வந்த நபர்கள் ஆகட்டும், இருநூறு நபர்களை வாஸ்து பயிற்சி கொடுத்து அவர் உறுவாக்கிய வாஸ்து பயிற்சியாளர்கள் ஆகட்டும், எட்டாயிரம் நபர்களுக்கு மேல் பயிற்சி கொடுத்த வாஸ்து நிபுணர் மூலமாக பயிற்சி எடுத்த நபர்கள் ஆகட்டும், இப்படி பலவழிகளில் வாஸ்து பார்த்து கொண்டிருந்தாலும்,ஆனால் இன்று வாஸ்து மிகச்சிறந்த முறையில் வாஸ்து பார்ப்பவர்களை எண்ணிக்கை படுத்தினால் ஒற்றை இலக்கத்தை தாண்டாது.மீதி உள்ளவர்கள் எங்கே இருக்கின்றனர் என்றே தெரியாது. ஆக இதற்கு காரணம் ராகு மற்றும் சனி கிரகங்கள் தான் என்பேன்.

ராகுவின் சம்பந்தம் இல்லாதோ,சனி கிரகத்தின் சம்பந்தம் இல்லாதோ, ஒருவர் மிகப்பிரபலமான வாஸ்து நிபுணராக உலகில் வலம் வரமுடியாது. சனியின் தொடர்பு மற்றும் ராகுவின் தொடர்பு இருக்கும் போது மட்டுமே ஒருவர் வாஸ்து நிபுணராக இருக்க முடியும்.

இதனை எதற்காக சொல்லுகிறேன் என்றால் என்னிடம் வாஸ்து குறித்த சந்தேகங்களுக்காக பணத்தில் பெரிய மதிப்பீடு உள்ள வீடுகளை கட்டுகின்ற மக்கள் கூட எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது என்று கேட்டு தொலைபேசியில் அழைப்பார்கள். அந்த இடத்தில் ஒருசில ஒரு சில வார்த்தை மட்டும் பேசிவிட்டு தொலைபேசியை வைக்கும் சூல்நிலை ஏற்படும்.அதற்கு காரணம் எனது வாடிக்கையாளர்கள் உடனான சந்திப்பு மற்றும் எனது வாஸ்து பயணத்தில் இருக்கும் போதும் பேசுவது என்பது கடினம்.ஆக அந்த நேரத்தில் தொலைபேசி அப்பொழுது அவர்களின் சந்தேகம் தீர்ந்ததாக இருக்காது.

ஆக அந்த இடத்தில் தவறாக தொலைக்காட்சி மூலமாக வாஸ்து குறித்து பேசுபவர்களின் பேச்சை கேட்டும்,வாஸ்து குறித்த புத்தகங்கள் படித்துவிட்டு தனது வீட்டை வாஸ்து அமைப்பாக ஏற்படுத்துவது என்பது கட்டாயமாக மனித உயிர்களை பழிவாங்கும் செயலாக முடியும்.

இந்த வாரத்தில் ஒரு நண்பர் வாஸ்து சார்ந்த நிகழ்வில் எனக்கு பழக்கம். வாஸ்து விசயத்தில் அனைத்து விபரங்களையும பேசுவார்.அனைத்து தொலைக்காட்சியில் வாஸ்து நிபுணர்கள் பேசும் வாஸ்து சார்ந்த அனைத்து நிகழ்சிகளையும் விடாது பார்த்து வருபவர்.வாஸ்து நிபுணர்கள் தொலைக்காட்சி வழியாக சொல்லக்கூடிய ஆலயங்கள் அனைத்து இடங்களுக்கும் சென்றால் வாஸ்து குறைகள் நீங்கும் என்ற தவறான எண்ணத்தில் மாதம் ஒருமுறை தவறாது காஞ்சி காமாட்சி அம்மையின் ஆலயத்திற்கும் பெளர்ணமி தவறாது போய் வருபவர்.அப்படிப்பட்ட நண்பரின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் இன்று காலை நெருப்பில் மரணத்தை தழுவினார்கள்.அப்படிப்பட்ட இரங்கல் நிகழ்வில கலந்து கொள்ளும் போது முதன்முறையாக அவரின் இல்லத்தை பார்க்கும் போது தெரிகின்றது அவரின் இல்லம் தென்கிழக்கு அக்னி பகுதியில் வெளிப்படையாக திறப்பு உள்ளது என்று, அங்கு அக்னி பகுதி திறந்தவெளியாக உள்ளது. மற்றும் தெற்கு பகுதியில் வெளிப்புற கழிவறை மற்றும் தென்மேற்கு பகுதியில் சிறிய அளவில் துணை அறைகளை பின் புறத்தில் அமைத்து உள்ளார். இதனால் இந்த கட்டிடம் சிறிய உயரம் தாழ்ந்த கட்டிடமாக வாஸ்து குறையாகி விடுகிறது. இப்படிப்பட்ட தவறுகள் அந்த வீட்டில் ஒட்டுமொத்த பெண்களும் இல்லாத நிலை ஆகிவிடுகிறது.

ஆகவே ஒரு வீடு சரியான வாஸ்துப்படி வேண்டும் என்றாலே தயவு செய்து வாஸ்து ஆலோசகரை அழைத்து அவரின் ஆலோசனைப்படி உங்கள் கட்டிடங்களை அமைப்பது நல்லது. அதனைவிடுத்து வாஸ்து நிபுணரை தொலைபேசியில் அழைத்து சந்தேகம் கேட்டு கட்டிடம் கட்டுவது என்பது மரத்தில் ஏறி கையை விடுவதை போன்றது.ஒவ்வொரு விசயத்திற்கும் ஒரு விலை உண்டு. அது வாஸ்த்துவிற்கும் பொருந்தும்.

இன்று காலமான மூன்று உயிர்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்