வாஸ்து தவறுகள் வீட்டு உரிமையாளருக்கா? வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர்களுக்கா?

balcony,Vastu and rent houses,
balcony,Vastu and rent houses,

வாஸ்துவும் வாடகை வீடுகளும்,

வாஸ்துப்படி வீடுகள் இல்லாமல் போகும் போது கட்டாயம் அந்த வீட்டில் எந்தவித நற்பலன்களும் நடக்காது. ஒரு இடத்தில் வீட்டிற்கு அடிதளம் போடுவது அதாவது மனை கோள  வாஸ்து நாள் பார்த்து போடுகிறோம்.ஆனால் வாஸ்து விதிகளை கடைபிடிக்கிறோமா என்றால் கட்டாயமாக சிலர் கடைபிடிப்பதில்லை.

வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பூஜை அறை  படுக்கை அறை மற்றும் குளியல்அறைகள் கழிவறைகளை எப்படி அமைய வேண்டும் என்பதை வாஸ்துவிதிகளை கடைபிடித்து கட்டினால் ஒரு வீடு என்பது சிறப்பு பெரும்.நாம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல    வாகனங்களை மட்டுமே அதிக அளவில் பயன்படுத்துகிறோம். அப்படி நாம் பயன்படுத்தும் வாகனங்கள்  அதாவது நாம் பயணம் செய்யக்கூடிய வாகனம் நம்முடையதாகவும் இருக்கலாம்.வாடகைக்கு எடுக்கும் வாகனமாகவும் இருக்கலாம் பேருந்து மற்றும் வாடகை காராக கூட   இருக்கும்.

 

ஆக பயணம் செய்யக்கூடிய வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்களை மட்டுமே நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்.
அதாவது  வாகனத்தில் பிரேக்  சரியாகஇருக்கிறதா,நல்ல வாகன ஓட்டுனரா,வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர் எவ்வளவு வேகம் போனாலும் நம்மால் பயம் இல்லாது உள்ளே அமர்ந்து இருக்க முடியுமா,இதுபோல இன்னும் பல ,பல விசயங்களை பார்த்துதான் நாம் வாகனங்களை உபயோகிப்போம். இப்படி பல  பாதுகாப்பு விசயங்களை பார்த்தும் வாகனத்தை எடுத்தாலும், ஏதாவது விபத்து ஏற்படுமானால்அதில் பயணம் செய்தவர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த வண்டியின் உறுமையாளருக்கு உடல் ரீதியாக ஏதாவது ஒரு பாதிப்பு உண்டாகிறதா என்றால் கட்டாயமாக இல்லை. அந்த வாகனத்தில் பயணம் செய்த அத்தனை பேர் மீது மட்டுமே பாதிப்புகள் ஏற்படுகிறது. அதேபோல் தான் வீட்டு ஓனர் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

வாஸ்துவும் வாடகை வீடுகளும்,
வாஸ்துவும் வாடகை வீடுகளும்,

அந்த வீட்டை பொருத்தவரை அதில் யார் வசிக்கின்றார்களோ அவர்களுக்கு மட்டுமே வாஸ்து ரீதியாக நன்மையோ அல்லது தீமையான பலனையோ கட்டாயமாக கொடுக்கும்.ஆக வாடகை வீடாக இருந்தாலும் வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும். ஒரு தவறான வீட்டை கட்டி வாடகைக்கு விட்டு அந்த பணத்தை வாங்கி பணம் மூலம் வருமானம்  பெற்று ஒருவர் வாழ்கின்றனர் என்றால், ஒரு காலகட்டத்தில் அந்த பணத்தின் மூலமாக ஒரு சில தீமையியை அவர்கள் அனுபவித்து தான் தீர வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)