வாஸ்து சாஸ்திரத்தால் பணம் வருமா

மனையடி அளவுகள்
மனையடி அளவுகள்

 

 

 

 

 

ஒரு வீட்டின் அமைப்பு வாஸ்து விதிகளுக்கு அடிப்படையில் இருந்தால் பணம் வருமா?” என்பது அனைத்து மக்களிடமும் ஒர் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.ஒர் மனிதனின் வாழ்கையில் பணம் என்பது ஒரு சிறிய பகுதியே. பணம் மட்டும் இருந்தால் நிம்மதி கிடைத்து விடாது. அது இல்லாலும் நிம்மதி கிடைக்காது.

எனவே வாஸ்து சாஸ்திரத்தால் பணம் வருமா என்று ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு, வாஸ்துப்படி நாம் வசிக்கும் அனைத்து இடங்களையும் மற்றும் நமது தொழிற்சாலைகளையும், அமைத்துக் கொள்வதால் பணத்துடன் அனைத்து சுகங்ளையும் நாம் அடைய முடியும் என்பதை உணர வேண்டும்.
எனது வாஸ்து பயண அனுபவத்தில் “வாஸ்து ” இல்லாத இடத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த பலர் “வாஸ்து ” வரும்படி மாற்றியமைத்த உடன் அனைத்து நலன்களும் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

அதாவது நாம் சும்மா இருந்தாலும், நம்முடைய வாஸ்து அமைப்பில் உள்ள வீடு நம்மை சும்மா இருக்க விடாது.
எனவே வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒருவர் வசிக்கும் இடம் அமையும் போது அவர் அனைத்து வசதிகளையும் அடைகின்றார் என்பது உண்மை.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். அதாவது வாஸ்து படி உள்ள இல்லத்தில் முன்பு வசிக்காமல் இருந்து தற்போது வாஸ்து பலம் பொருந்திய இல்லத்தில் வசிக்கும் போது கட்டாயமாக மாதம் ஐம்பது ஆயிரம் வருமானம் இருந்தால் உங்கள் வருமானம் ஒரு லட்சத்திற்கு மாறும். ஆனால் அதுவே உடனே உங்கள் வருமானம் ஐந்து லட்சத்திற்கு மாறும் என்று எதிர்பார்த்தால் நடக்காது. படிப்படியாக உயர்வு இருக்கும். ஆனால் இடையில் சரிவில்லாது நடக்கும்.