வாஸ்து என்றால் என்ன?

வாஸ்து என்றால் என்ன பூமி 23.5 டிகிரி சாய்ந்த கோணத்தில் சுற்றி வருகிறது .அதாவது சூரியனை சுற்றி வருகிறது. அதுவும் தன்னை தானே. அந்த வகையில் அப்படி சுற்றும் பொழுது ஏற்படக்கூடிய காற்றின் வேகம்தான் வடகிழக்கு பாஸிட்டிவ் எணர்ஜி ஆகும். வடக்கில் இருந்து வரக்கூடிய பாசிட்டிவான விஷயம்தான் வாஸ்து என்றாலும்,  காந்த விசை என்பது மிகவும் முக்கியம். காந்த விசை எப்போதும் வடக்கு திசையை மட்டுமே காட்டும். வடதிசையில் பொறுத்தி ஒரு இல்லத்தை அமைத்தோம் என்று சொன்னால், காந்தவிசை பொருந்தும் அமைப்பில் அமைக்க வேண்டும். வாஸ்து என்பது இவ்வளவுதான். காற்றையும், சூரிய வெளிச்சத்தையும், பூமியின் மையப்பகுதியில் நிலை நிறுத்தி பார்ப்பதே வாஸ்து. வாஸ்து என்பதனை ஒரு சில மக்கள் இந்து மதம் சார்ந்த விஷயமாக பார்க்கின்றனர். ஆனால் என்னை பொறுத்த அளவில் இது ஒரு மதத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். சூரியனின் வெளிச்சம், பூமி சுற்றுவது காரணமாக ஏற்படும்  பூமியின் நிலை தன்மையானபிரபஞ்ச சக்தி என்கிற காற்றும், காந்த தன்மையை நிலை நிறுத்தி பார்க்கும் கலை ஆகும். இதனை ஜோதிடத்தில் இனைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு சில இடங்களில் ஜோதிடத்தில் உள்ள ராசிகளை இணைத்து பார்ப்பார்கள். அது ஒரு சின்ன விஷயமாக பார்க்கப்படுகிறது . ஆக வாஸ்துவின் ராசியை உள்ளே கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாது.