வாஸ்து என்கிற இயற்கையின் அறிவியல்.

வாஸ்து என்றால் என்ன?
வாஸ்து என்றால் என்ன?
வாஸ்து என்றால் என்ன?
வாஸ்து என்றால் என்ன?

வாஸ்து என்றால் என்ன?

 

வாஸ்து என்றாலே நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்களை வீட்டில் நிலைநிறுத்துவது ஆகும்.  வாஸ்து என்பது பிரபஞ்ச சக்திகளாகிய பஞ்ச தத்துவத்திற்கு ஏற்ப வீடு கட்டுவதற்கு  அல்லது வசிக்கக்கூடிய இடம்   வாஸ்து விதிகளை உட்புகுத்தி அமைப்பதே ஆகும்.இதனை மனையடி சாஸ்திரம் என்றும் அழைக்கின்றனர். இந்த மனையடி சாஸ்திரமே வாஸ்து சாஸ்திரம் என்று கூறப்படுகிறது.

 
 பண்டைய பாரத தேசத்தில் வாஸ்து மூன்று வகைகளாக  இருந்திருக்கின்றன. உத்திர  இந்தியாவில் கஷ்யபரின் சிந்தாமணி வாஸ்துவும், கர்நாடகத்தில் மற்றும் ஆந்திராவில் மயனின் மயமத வாஸ்துவும், தமிழ் நாட்டில் பிருகு நந்தி வாஸ்து மற்றும் சித்தர்களின் மனையடி சாஸ்திரமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

 
பஞ்ச பூதங்களால் ஆன இந்த பூமி சுமார் 84 இலட்சம்   கோடி உயிரினங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.  இந்த 84 இலட்சம்  கோடி வகை உயிரினங்களில் மனிதன் மட்டுமே மற்ற உயிரினங்களில் மிகவும்  வேறுபட்டே வாழ்கிறான்.  மற்ற உயிரினங்கள் எல்லாம் சில இயற்கை  விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து வருகின்றன.  ஆனால் மனிதன் மட்டும் சிந்தனை, ஆற்றல், செயல்முறை, உழைப்பு, ஆராய்ச்சி, ஆகியவற்றினால் இயற்கை சக்திக்கு உட்பட்டும் உட்படாமலும் மீறியும் வாழ பழகிவிட்டான்.

 

இந்த எண்பத்தி நான்கு லட்சம் கோடி உயிரினங்களுக்கு அழிவு என்றும் கிடையாது. ஆனால் மறைந்து பிறத்தல் என்பது உண்டு.
 மனிதன்  வாஸ்துவின் இயற்கை விதிக்கு உட்பட்டு வாழும் பொது பல வகையான நன்மைகளும், முன்னேற்றங்களும் அடைய முடியும்.

 
 வாஸ்து விதிகளை கடைபிடிக்காத போது மன நிம்மதியை இழந்தும், ஏற்றத் தாழ்வுகளைப் பரிசாகப் பெற்றுப் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.  இயற்கையோடு ஒத்து வாழும் மிருகங்களும், பறவைகளும், மற்ற ஜீவராசிகளும், ஆரோக்கியமான உடல்நிலை, மனநிலை பெற்று ஆனந்தமாக வாழ்கின்றன.அதற்கு காரணம் அவைகள் இயற்கை என்கிற விசயத்தில் ஒரு கூண்டுக்குள் அடக்கம் ஆகாது வாழ்க்கை நடத்துகிறது.

 
அப்படிப்பட்ட கடவுளின் படைப்பில் 84 இலட்சம் கோடி ஜீவராசிகளில் அற்புதமான படைப்பு மனிஉயிரினம் ஆகும்.  இப்படி அற்புத படைப்புகளில் மனிதன் மட்டும் இன்று நாகரீகம் என்ற பெயரில் இயற்கை விதியை மதிக்காமல் அநாகரிகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

 

 விஞ்ஞானம் என்ற பெயரில் இயற்கையை சீரழிவு செய்து வாழ்வின் கஷ்டத்தில் மூழ்கிக் இருக்கின்றார்கள். இயற்கையோடு ஒத்த அறிவியலை  அனுசரிக்காமல் அதை எதிர்த்து  அறிவை வளர்த்து அதன் மூலமாகவே அழிவைத் தேடிக் கொண்டு சிரமப்படும் வாழ்க்கை வாழ்கிறார்கள். வாஸ்து என்கிற பிரபஞ்ச சக்தியை புரிந்து கொண்டு வாழும்போது மிக அற்புதமான வாழ்க்கை மனிதர்களால் வாழ முடியும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)