வாஸ்து அமைப்பில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பு.

வாஸ்துப்படி ஆழ்துளை கிணறு
வாஸ்துப்படி ஆழ்துளை கிணறு

 வாஸ்துப்படி கிணறு மற்றும், ஆழ்துளை கிணறு 

ஒரு இல்லம் என்பது எந்த திசையைப் பார்த்து இருந்தாலும், கிணறு என்பதோ,அல்லது ஆழ்துளை கிணறு என்பதோ அந்த இடத்தில் வடகிழக்கில் மட்டுமே வர வேண்டும். அதேபோல இரண்டு இடங்கள் இருந்து அதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக் கூடாது. அதுவும் வாஸ்து குற்றம் ஆகி விடும்.
நீங்கள் வீடு கட்ட தொடங்குகிறிர்கள் என்றால், அல்லது ஒரு தொழிற்சாலை அமைக்கின்றிர்கள் என்றால்,பூமி பூஜை என்று சொல்லக்கூடிய வேலை தொடங்கும் பூஜையை முடித்துவிட்டு கிணறு அல்லது ஆழ்துழாய் கிணறு அமைப்பது நல்லது.
ஒரு கிணறு அமைக்கின்றிர்கள் என்றாலே அந்த கிணறு வீட்டின் சுவரையும், அந்த இடத்தின் சுற்றுச்சுவரையும் தொடும் அமைப்பில் இருக்கக்கூடாது.
அதேபோல வீட்டின் சுற்றுசுவரின் மூலைவிட்டங்களின் இடையே ஆழ்துளை கிணறோ அல்லது கிணறோ வரக்கூடாது.
ஒரு இல்லத்தில் உட்புறப்பகுதிக்குள் அதாவது கார்பெட் ஏரியா என்று சொல்லக்கூடிய பகுதிக்குள்,கிணறோ அல்லது ஆழ்துளை கிணறோ,தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளோ எக்காரணம் கொண்டும் இருக்கக்கூடாது.

 

 

வாஸ்துப்படி கிணறு
வாஸ்துப்படி கிணறு

கிணறு மற்றும் போர் என்று சொல்லக்கூடிய ஆழ்துளை கிணறோ வடமேற்கு மற்றும் தென்கிழக்கு, தென்மேற்கு பகுதிகளில் வரக்கூடாது. இப்படி இருக்கும் போது வாஸ்து அமைப்பில் அங்கு வாழ்வது என்பது தவறு ஆகும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)