வாஸ்து அமைப்பில் கழிவுநீர் தொட்டி

வாஸ்து அமைப்பில் கழிவுநீர் தொட்டி என்கிற , செப்டிக்டேங்க் வடமேற்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும். ஒரு சில மக்கள் தென்கிழக்கு பகுதியில் அமைத்திருப்பார்கள் என்னை பொருத்த அளவில் தென்கிழக்கு பகுதியில் கழிவுநீர் தொட்டி என்கிற விஷயத்தில் எதிர்ப்பாளராக நான் இருக்கின்றேன். ஏனென்று சொன்னால் தென்கிழக்கு பள்ளங்கள் அந்த வீட்டின் பெண்கள் சார்ந்த மக்களுக்கு பாதிப்பை கொடுக்கக்கூடியதாக மாறி விடுகிறது.ஒரு இல்லத்தில் ஒரு கழிவுநீர், தொட்டி செப்டிக் டேங்க் அவசியம். தெரிந்தோ தெரியாமலோ வீட்டுப் பெண்களின் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு வழிவகுக்கக் கூடிய இடமாகதென்கிழக்கு பகுதி மாறி விடுகிறது. ஆகவே எக்காரணம் கொண்டும் செப்டிக் டேங்க் என்பது ஒரு இல்லத்தில் வடமேற்குப் பகுதில் மட்டுமே இருக்க வேண்டும்.வேறு வழி இல்லை, முடியவில்லை என்றால்  சுற்றுச் சுவருக்கு வெளிப்புறப் பகுதியில் வாய்பிருந்தால் அமைத்துக் கொள்வது மிக மிக நன்று.