வாஸ்துவும் தென்கிழக்கு திசையும்,

Vastu and the south-east direction
Vastu and the south-east direction

தென்கிழக்கு திசை

 

பஞ்சபூத சக்தியில் மிகவும் முக்கியமான விசயம் அக்னி ஆகும். இந்த அக்னி என்கிற நெருப்பு  இந்த உலகில் எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறது. மனித உடலில் ஜடாக்னியாக இருக்கிறது. இதுவே மனித உடலுக்கு தேவையான சத்துக்களை உணவினை எரியூட்டி வழங்குகிறது. இப்படி எல்லா உயிர்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கின்ற அக்னி என்கின்ற ஒரு சக்தியை நாம் நிலைநிறுத்தும் இடமே வீட்டின் சமையல் அறை ஆகும்.ஏனென்றால் அங்குதான் மனித வாழ்விற்கு ஆதாரமாக உள்ள உணவு நெருப்பின் வழியாக உறுமாற்றம் அடைகிறது.        
பஞ்சபூதத்தில் மிகமுக்கியமாக கருதப்படும் நெருப்பு. கற்காலம் முதல் கொண்டு இன்றைய காலத்தில் ஒரு வீட்டில் டிஸ் ஏண்டனா, முதல் சோலார் பேனல்கள் வரை, இயங்க   தென்கிழக்கு திசையான அக்னி திசையே முக்கியமாக உள்ளது.
  அப்படிப்பட்ட இந்த திசையில் சமையல் அறைகள் அமைப்பது முதல்தரமானது.அதற்கு அடுத்தபடியாக இங்கே பூஜை அறைகளும் இருக்கலாம். இந்தப்பகுதியில் குடும்பத்தில் ஒரு சாராருக்கான படுக்கையறையாக உபயோகப்படுத்தலாம்.எக்காரணம் கொண்டும் வேறு உபயோகங்களுக்கு இந்த அறைகளை  நமது தேவைகளுக்காக பயன்படுத்தக்கூடாது.

 

 

இந்தப்பகுதியில் வரக்கூடாத அமைப்புகாகளைப் பற்றி பார்ப்போம். குடும்பத்தலைவரின் தலைவியின் படுக்கை அறைகள்.மற்றும் குளிக்கும் அறைகளோ கழிவறைகளோ எக்காரணம் கொண்டும் இங்கே இருக்கக்கூடாது. வீட்டில் இந்தப்பகுதியில் கார்பெட் ஏரியா இல்லாத நிலையை ஏற்படுத்தி வீட்டின் போர்ட்டிக்கோ மற்றும் கார்நிறுத்தும் இடங்களாக அமைக்க கூடாது. அதேபோல படிக்கட்டுக்களை இங்கே உட்பகுதியில் அமைக்க கூடாது. அதேபோல தண்ணீர் தொட்டி அமைப்பை வீட்டில் மேற்பகுதியில் ஏற்படுத்தக்கூடாது.வீட்டின் வெளிப்பகுதிகளில் பள்ளம் என்று சொல்லக்கூடிய கழிவுநீர் தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி  மற்றும் கிணறு ஆழ்துளை கிணறு  போன்ற அமைப்புகளை ஏற்படுத்தக்கூடாது.

 

வாஸ்துவும் தென்கிழக்கு திசையும்
வாஸ்துவும் தென்கிழக்கு திசையும்

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)