வாஸ்துவும் இல்லத்தில் மாடிப்படிகளும்,

staircase in outer
staircase in outer

 வாஸ்துப்படி மாடிப்படிகள்

படிகள் அமைக்கும் போது  படியின் திசைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமா?அல்லது ஏறும் திசைகளை கவனத்தில் கொள்ளவேண்டுமா என்று கேட்பார்கள். அதற்கு எனது பதில் கட்டாயமாக இரண்டையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றுதான் சொல்லுவேன்.

 
படிகளை அமைக்கும் திசை மற்றும் ஏறுகின்ற திசை இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு படிகளை அமைக்க வேண்டும். தெற்கு மற்றும் மேற்கு பார்த்த அமைப்பாக முதல் காலடி எடுத்துவைப்பது இருக்க வேண்டும். அதன்பிறகு நீங்கள் எந்ததிசைக்கு வேண்டுமானாலும்,திரும்பி விடலாம். எண்ணிக்கை என்பதும் கணக்கில் வைக்க வேண்டிய தேவைகள் கிடையாது. ஆனால் முதல் பாதம் வலது கால் எடுத்து வைக்கவும். அதன்பிறகு மாடியில் கால் வைப்பதும் வலது காலாக இருக்கட்டும்.  

 

மாடிபடிகள் எக்காரணம் கொண்டும் வடகிழக்கில் வரக்கூடாது. அதேபோல தவறான அமைப்பிலும் மாடிப்படிகளை,அமைத்து விடக்கூடாது. மாடிப்படிகளை அமைக்க சரியான இடம் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு,மற்றும் தென் மேற்கு இவைகள் வெளிப்புற பகுதிகளுக்கு பொருந்தும். மாடி வீடுகளாக இருக்கின்ற பட்சத்தில் தெற்கு மற்றும் மேற்கு மத்தியில் அமைத்து கொள்ளலாம்.வெளிப்படிக்கட்டுகளுக்கு கீழ் அறை மற்றும் கழிவறை அமைப்பது கூடாது. அடுக்கு மாடி வீடுகளில் வடகிழக்கு மூலையில் உள்ள வீடுகளுக்கு மட்டும் தான் ஓரளவுவாஸ்து பொருந்தும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதி பொது சுவராக இல்லாமல் திறப்புகளுடன் இருக்க வேண்டும் 

 

 

staircase in outer
staircase in outer

அதிக மக்கள் தவறு செய்வது மாடிப்படிகளை அமைக்கும் போது மட்டுமே. இநாத இடத்தில் ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக்கொண்டு செய்வதே உண்மையான மனிதர்களுக்கு அழகு.எதற்காக இந்த வார்த்தை என்றால் வெறும் புத்தகங்களை படித்தும்,இணையதளத்தில் பார்த்துவிட்டு படிகளை அமைப்பதும் தவறு .
ஆக வாஸ்து புத்தகங்களை எழுதும் வாஸ்து நிபுணர்களும், என்னைப்போல இணையதளத்தில் எழுதும் வாஸ்து நிபுணர்கள் அத்தனை நபர்களும்,எல்லா விசயங்களையும் சொல்லிவிட மாட்டார்கள். எதாவது ஒன்றை மறைத்து வைத்து விடுவார்கள்.இந்த விசையம் படி அமைப்பிற்கும் பொருந்தும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)