வாஸ்துவில் தொழிற்சாலைகள்

garment_workers_india
garment_workers_india

வாஸ்துவும் தொழில் நிறுவனங்களும்

வீடுகளுக்கும் ஒரு கடை இருக்கிறது என்றாலும், ஒரு தொழிற்சாலை இருக்கிறது. என்றாலும், வாஸ்து விதிகள் ஒன்றாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சம் மாறுபாடு இருக்கும். இந்த இடத்தில் என்னை வாஸ்து பார்க்க ஒருவர் அழைக்கின்றனர் என்றால், அவர்களிடம் நயமாக நாசுக்காக சொல்லி விடுவேன். நீங்கள் எங்கே உண்டு உறைவிடமாக இருக்கின்றிர்களோ அந்த இடம் முதல் அமைப்பாக வாஸ்து விதிகளுக்கும், மனையடி சாஸ்திர ஆயாதி குழி பொருத்தம் உள்ள அமைப்பாக இருக்க வேண்டும்.அதன் பிறகு உங்களின் தொழிற்சாலையின் வாஸ்து அமைப்பு உங்கள் வீட்டின் அமைப்பிற்காக ஒரு காலகட்டத்தில் மாறிவிடும்.

 

தொழில்கள் நன்றாக நடக்க மேற்கு புறம் தெற்கு புறம் சாலைகள் உள்ள இடங்களில் நன்றாக தொழிற்சாலை இயங்கும். அங்கு வாஸ்துபடி மற்றும் ஆயாதி பொருத்தத்தின் அமைப்பில் கட்டிடம் கட்டும்போது மிகச்சிறந்த அமைப்பில் அந்த ஊரில் உங்கள் தொழில் சார்ந்த துறையில் என்றுமே முதன்மையான தொழிற்சாலையாக இருக்கும்.

 

புதிய தொழிற்சாலை அமைக்கும் போது அந்த தொழிற்சாலையின் மேல் ரூபிங் வேலைகளுக்கு பழைய தொழிற்சாலைகளின் செட்டுகளை உபயோகப்படுத்துவார்கள்.இது வாஸ்து அமைப்பில் மிகவும் தவறு.இந்த இடத்தில் ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் மிகச்சிறந்த நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே பழைய பொருள்களை வாங்கி உபயோகித்தாலும் கெடுதலான பலன்களை கொடுக்காது. ஆக எல்லோருக்கும் நன்மைதரும் என்று சொல்லமுடியாது.

 

வாஸ்துவும் தொழில் நிறுவனங்களும்
வாஸ்துவும் தொழில் நிறுவனங்களும்

கழிவுநீர் ஒரு தொழிற்சாலையின் முன்புறம் தேங்கக் கூடாது. அதனால் வாஸ்துகுற்றம் ஆகிவிடும். அப்படி தண்ணீர் தேங்கி இருந்தால் அப்புற படுத்த வேண்டும்.தொழிற்சாலையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் என்றும் கட்டிடம் கட்டாது காலி இடங்களாகவே விட வேண்டும். வடகிழக்கில் அலுவலகங்கள் அமைத்தாலும் தாழ்வாக தொழிற்சாலையின் உயரத்தில் குறைவாக அமைக்க வேண்டும். எந்த இடங்களாக இருந்தாலும் வடகிழக்கில் அதிக இடங்களாக விடும் போது மற்ற வாஸ்து குற்றங்களையும் குற்றங்கள் இல்லாத நிலைக்கு கொண்டு செல்லும்.