வாஸ்துவில் கிழக்கு திசை

east-west-facing-house
east-west-facing-house

கிழக்குதிசையும் வாஸ்து சாஸ்திரமும்

ஒரு மனிதனின் உயர்வுக்கு வாஸ்துவில் துணை புரியும் திசை கிழக்கு திசை ஆகும்.ஒருவர் வாழ்வில் அனைத்து விதமான சந்தோசங்களையும் அனுபவிக்கும் மக்களாக இருப்பவர்கள் அனைவருமே கிழக்கு அதிக இடங்களாக இருப்பவர்கள் ஆவார்கள்.கிழக்கு திசை அறிவு, ஆற்றல் மற்றும் ஆண்மையைக் குறிக்கும். இந்த திசையை நன்றாக முறைப்படி அமைத்தால் குடும்பத்தில் உள்ள ஆண்கள் மகிழ்ச்சியாகவும், போக பாக்கியங்களோடு வாழ்வார்கள்.

கிழக்கு திசையில் அதிக இடங்கள் இருக்கும் மக்கள் என்றும் எதற்காகவும் பயப்படாத மக்களாக இருப்பார்கள். ஆக இந்த திசையை சரியாக உபயோகிக்கும் போது மிகப்பெரிய வெற்றியாளர்கள் இவர்களே.இநாத திசையை வாஸ்து அமைப்பில் சரியாக அமைக்கும் போது அரசியல் துறையில் இருப்பவர்களுக்கும், IAS IFS IRS போன்ற அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கும்,அரசு பணியில் ஒரு அலுவலகத்தில் தலமை அதிகாரிகளாக இருப்பவராகளுக்கும் சிறப்பாக செயல்பட வைக்கும். தங்களின் அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி முதன்மை நபர்களாக செயல்பட இந்த கிழக்கு திசை துணை புரியும்.

இந்த திசை சரியாக ஒருவரின் இல்லத்தில் இல்லையெனில், மிகப்பெரிய உயர்ந்த பதவியில் இருக்கக்கூடிய சூல்நிலை இருந்தாலும்,அவர்களின் உதவியாளர்களே அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் நபர்களாக இருப்பார்கள். வெளிஉலகிற்கு வேண்டுமானால் உயர்ந்த பதவி என்கிற விசயம் இருக்கும். தனிப்பட்ட முறையில் சாதாரண அதிகாரிகள் போலத்தான் இருப்பார்கள். இதற்கு முழுக்க காரணம் ஒரு இல்லத்தின் கிழக்கு திசை அமைப்பே ஆகும்.

vastu_north_east_west_south_facing_houses
vastu_north_east_west_south_facing_houses

ஒரு வீட்டில் கிழக்கு திசை வாஸ்து விதிகளுக்கு பொருந்தும் அமைப்பினை பெறாதபோது இவர்களின் பணத்தினை மற்றவர்கள் உபயோகப்படுத்தி பெரிய  இடத்தை பெறுவார்கள். இவர்களிடம் மிகக்குறைந்த வட்டிக்கு இவர்களின் பணத்தினை வாங்கி உபயோகித்து பணத்தின் மதிப்பு பத்து வருடங்களில் மாறிவிட்ட பிறகு அசலை மட்டுமே திருப்பி தருவார்கள். இதுபோன்ற நிலையை கிழக்கு திசை தவறாக உள்ள வீடுகள் ஏற்படுத்தி விடும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)