வாஸ்துவின் முக்கியமான விதிகள் பற்றிய விளக்கங்கள்

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/11/office-housekeeping-rules-office-housekeeping-the-red-green-kitchen-in-office-room-in-house-vastu.jpg
http://chennaivasthu.com/wp-content/uploads/2017/11/office-housekeeping-rules-office-housekeeping-the-red-green-kitchen-in-office-room-in-house-vastu.jpg

வாஸ்துவின் முக்கியமான விதிகள்

வாஸ்து அமைப்பில் எட்டு அடிப்படை விதிகள் உண்டு. இந்த அடிப்படை விதிமுறைகளை  தெரியாது ஒருசிலர் வீட்டின் அமைப்பை மாற்றி அமைத்து  வறுமை நோய் கடன் மற்றும் மனையில் சோடச பொருத்தம் இல்லாமல் இருந்து மனக்குழப்பங்கள் போன்றவற்றில் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது. கீழே குறிப்பிட்ட வாஸ்து விதிகள் கட்டாயம் கடைப்பிடிக்கும் போது சிறப்பான வாழ்வு அந்த மனையில் வாழ்பவர்கள் வாழ முடியும்.

1. வீடு  என்பது எப்பொழுதுமே சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ  இருக்க வேண்டும். இந்த விதிகள் வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் பொருந்தும். வீட்டின் சுற்று சுவருக்கும் பொருந்தும். வீட்டின் மேல்தளத்திற்கும் பொருந்தும்.எக்காரணம் கொண்டும் வீட்டில் பால்கனி அமைப்பை ஏழடி மட்டத்தில் இறக்கி போடும் போது ஒருசில திசைகளில் ஒருசில தவறுகளை கொடுக்கும்.
2.ஒரு இல்லத்தில் வடக்கு மற்றும் கிழக்கு அதிக இடங்களாக இருக்க வேண்டும். அதாவது மேற்கு புறம் இரண்டு அடி விடுகின்றோம் என்றால் கட்டாயமாக கிழக்கு புறம் குறைந்த பட்சமாக மூன்று அடிகளாவது வகட வேண்டும். அதனை விட எவ்வளவு அதிகம் இருக்க வேண்டுமோ அவ்வளவு நல்லது.
3.தென்மேற்கு பகுதி உயரமாகவும் வடகிழக்கில் திழ்ந்த அமைப்பாக இருக்க வேண்டும். அதாவது தென் மேற்கு உயர்நிலை தண்ணீர் தொட்டியோ அல்லது உயர்ந்த அமைப்பாக அறைகளோ இருக்க வேண்டும். வடகிழக்கில் குழ்நிலை தண்ணீர் தொட்டி கட்டாயம் வேண்டும்.இந்த அமைப்பை தரைத்தளத்திலும்  உபயோகிக்க வேண்டும்.

 

4. படி  என்பது வடகிழக்கு தவிர மற்ற மூன்று பகுதிகளிலும் வீட்டிற்கு வெளிப்புறத்தில் வருவது சிறப்பு.வெளிப்புறத்தில் தென்மேற்கு மட்டும் ஒரு வித எச்சரிக்கையோடு படியினை அமைக்க வேண்டும். உள்படியாக.இருக்கின்ற போது, படி அமைப்பு என்பது தெற்கு மத்திய பகுதியிலும், மேற்கு  மத்திய பகுதியில் மட்டுமே வரவேண்டும். வேறு எங்கு வந்தாலும் அது வாஸ்து அமைப்பில் மிகப்பெரிய தவறுதான்.இதே தவறுகளை மேற்கு தெற்கு  பகுதியில் படிகள் இருந்தால் வாஸ்து அமைப்பில் சரி செய்து கொள்ள முடியும்.இதுவே வடக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் இருக்கும் போது சரி செய்வது முடியாத காரியமாகும்.

 

5.வீட்டின் வெளிப்புற பகுதிகள் நம்முடைய மனைக்கு மிகச்சரியான அமைப்பாக இருக்க வேண்டும். அதாவது தெருகுத்து  மற்றும் தெருபார்வை இல்லாமல் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தவறான தெருகுத்தாக ஒரு மனை இருக்க கூடாது.மற்றும் பள்ளம் மேடுகள் போன்ற அமைப்புகள் முறை தவறி மாறிய அமைப்பில் இருக்கக்கூடாது.
6.கதவுகள் அனைத்தும் உச்ச வாசல் அமைப்பாக இருக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் தவறான அமைப்பில் வீட்டின் வாயில்கள் வீட்டின் காம்பவுண்ட் கதவுகள் உட்பட சரியான உச்சத்தில் இருக்க வேண்டும். இந்த இடத்தில் சாளரங்களும் உச்சம் என்கிற அமைப்பாக இருக்க வேண்டும்.
7.மிகச்சிறந்த அமைப்பாக வடக்கு மற்றும் கிழக்கு சுவரின் வடகிழக்கில் உச்ச அமைப்பில் ஜன்னல்கள் கட்டாயமாக வேண்டும். இதனை அந்த வீட்டின் வாழ்நாள் வரை நிறந்த நிலையில் இருக்க வேண்டும். அதேபோல வடமேற்கு வாயூமூலையில் ஜன்னல் வேண்டும் அதனையும் திறந்த அமைப்பாக அந்த வீட்டின் வாழ்நாள் வரை இருக்க வேண்டும். தெற்கு சார்ந்த அக்னி மற்றும் அக்னி பகுதியில் உச்சத்தில் ஜன்னல் வேண்டும். அதனை தேவைக்கு தகுந்த அமைப்பில் திறக்கவும் மூடவும் செய்யலாம்.

 

Vastu-remidies
Vastu-remidies

8.மனையடி சாஸ்திர மனையடி சோடச பொருத்தம் இல்லாமல் வீடு எக்காரணம் கொண்டும் கட்டக்கூடாது. இதனை பார்காமல் செய்யும் இல்லங்களை ஒரு காலகட்டத்தில் நமது கையை விட்டு போய்விடும். அப்படியே இருந்தாலும் ஆதாய பொருத்தம் இல்லாமல் இருக்கும் போது வரவை விட செலவு வைக்கும் மனையில் மனையடி பொருத்தம் பார்க்காமல் வீடு கட்டும் போது ஆதாயத்தை விட விரையம் அதிகமாகும் போது எப்பொழுதுமே கடனோடு வாழ்ந்து கடனை அடுத்த தலைமுறைக்கு வழங்கிவிட்டு செல்லும் வாழ்க்கையை ஒரு வீடு வழங்கிவிடும்..

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)