வாஸ்துவின் பலன்கள்

வாஸ்துப்படி வீட்டின் பலன்கள்
வாஸ்துப்படி வீட்டின் பலன்கள்

வாஸ்துப்படி வீட்டின் பலன்கள்

 

ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள உயிரினங்களில்  மனிதன் மட்டுமே ஆறு அறிவு உள்ளவன் , அவன் மட்டுமே சிந்திக்கின்றான் ஆராய்ச்சி செய்கிறான்.  தன் உணர்வுகளை  உடலின் வழியாக  தெரிவித்துக் கொள்கிறான்.  தனக்குத் தேவைப்படும் வசதி வாய்ப்புகளைத் தேடி தேர்ந்தெடுத்து கொள்கின்றான்..  நல்லது கெட்டது எவை என்று ஆராய்ந்து அனுபவித்து தெரிந்து கொள்கின்றான்.அப்படி அவனை ஆராய தூண்டும் செயல் என்னவென்றால் அவன்வசிக்கின்ற இல்லமே ஆகும்.

 
அறிவியல் சார்ந்த இயற்கையோடு ஒன்றிய விஞ்ஞானத்தை ஆராய்ந்து வெற்றியடையும் திறமை மனித இனத்திற்கு மட்டும் இயற்கை அளிக்கிறது.  ஆயக் கலைகள் 64 வகையை கண்டுபிடித்து அனுபவித்து வரும் மனிதன் பல சிந்தனை சிற்பிகள், ஞானிகள், சித்தர்கள், மகான்கள், பெரியவர்கள், நமக்கு விட்டுச் சென்ற பொக்கிழங்களை அறிந்து அதன் பயனை நாமும் நம்மை சார்ந்தவர்களும் பெற வேண்டும்.  இந்த உலகில் பிறந்த அத்தனை மனிதர்களும் எந்த வகையிலாவது தனித்தன்மைகள், திறமைகள், சிறப்புகள் பெற்று இல்லாதவர்கள் இல்லை.  ஆனால் தன்னிடம் இருக்கும் திறமை தெரியாமல் வெளிப்படுத்தாமல் இந்த மண்ணிற்கும் உலகிற்கும் நாட்டிற்கும், வீட்டிற்கும், பாரமாக வாழ்ந்து சென்றவர்களும், வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் தான் அதிகம்.  ஆகவே இயற்கை நமக்களித்த வசதிகள், வாய்ப்புகளை நாம் முழுமையாக முறையாக பயன்படுத்த பிறவிப்பயன் அடைவோம். 
ஆயக்கலைகள் 64 கலைகளில் சிறப்புடையதும் அவசியமான, முதன்மையானதும், தொன்மையானதும், வளமிக்க வாழ்க்கைக்கு தேவையானதும வாஸ்து கலை 13 -வது கலையாக நமது முனிவர்கள் நமக்கு அளித்து சென்றுள்ளார்கள்.  

 

 இந்த வாஸ்து கலையை நாம்  இதன் சாதக பாதகங்களை ஒளிவு மறைவு இல்லாமல்  சொல்லும் போது, சமுதாயத்திற்கும் பெரிதும் உதவக்கூடிய சமுதாய பணியாக எல்லோரும் ஏற்று கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்றால், வாஸ்துவை கடைபிடிக்க வேண்டும். மேலும் வாஸ்து குறைகள் மூலம் பல இன்னல்களில், இழப்புகளில், துக்கத்தில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு வாஸ்துவின் மூலமாக வளம் பெறுக வேண்டும் என்றால் வாஸ்து அமைப்பில் ஒரு இல்லம் இருக்க வேண்டும்.
 உணவு, உடை, உறைவிடம், இந்த மூன்றும்  ஒரு மனிதன் வாழ்வதற்கு முக்கியமானதாகும்.  உறைவிடமாகிய வீடு வாஸ்து விதிகளுக்கு பொறுந்தாது அமைத்துக் கொள்பவர்கள் வாழ்க்கையில் சிரமப்படும் வாழ்வு, வாழ்வில் கஷ்டங்கள், வாழ்வில் கேவலங்கள், அவமானத்தில் அவலங்கள், சண்டை சச்சரவான வாழ்க்கை, வம்பு வழக்குகள், விபத்துகள், அகால மரணங்கள், காரணமே இல்லாமல், குடும்பத்தில் சண்டைகள், உடல் நல குறைவுகள், மன நல பாதுகாப்புகள், முன்னேற்ற தடைகள், குழந்தை பாக்கியம் இல்லாமை, ஊனமுற்ற குழந்தைகள் பிறத்தல், திடீர் நஷ்டங்கள், பண விரயங்கள், கணவன் மனைவி சண்டைகள், கணவன் மனைவிக்கு தகாத உறவுகள் மூலம் கொலை செய்யும் அளவுக்கு மனநிலை மாறுதல் அடைதல், மனக் குழப்பங்கள், பொருளாதார நெருக்கடி, தொழில் வியாபாரத்தில் நஷ்டங்கள், மற்றும் தீய ஆவிகள் (பேய், பூதம்) பிரவேசம், நடமாட்டம், செய்வினைகளால் பாதிப்பு, தீயினால் பாதிப்பு மற்றும் தீ மூலமாக தற்கொலை செய்து கொள்வது, போன்ற கொடுமையான பலன்கள் ஏற்பட்டு அதில் இருந்து மீள முடியாமல் பலர்  இருப்பதற்கு காரணம் முழுக்க முழுக்க வாஸ்து குறைபாடுகளே ஆகும்.

 

வாஸ்து குறையினால்தான் கஷ்டங்கள் ஏற்படுகிறது என்று சொன்னால் சிலர் எனது வாஸ்து பயணத்தில் நம்ப மறுக்கிறார்கள்.சில மக்கள் இது மூட நம்பிக்கை என்று சொல்வார்கள்.  வாஸ்து என்பது ஏமாற்றுக்காரர்களின் வாய்ஜால வித்தை என்பவர்களும் என்றும் சொல்லித் வருகிற மக்களையும் நான் பார்த்திருக்கிறேன், இதற்கு காரணம் அரைகுறை வாஸ்து நிபுணர்களே காரணம் ஆகும்.

 

வாஸ்துப்படி வீட்டின் பலன்கள்
வாஸ்துப்படி வீட்டின் பலன்கள்

இவர்களின் இந்த வார்த்தைக்கு முக்கிய காரணம், அரைகுறை வாஸ்து சொல்லும் நபர்கள் அழகான  கவர்ச்சியான பேச்சற்றளினாலும்,தனது விளம்பரங்களினாலும்,வாஸ்து ஆலோசனை என்ற பெயரில் பெரும் தொகையை ஆலோசனைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு முறையாக வாஸ்து குறைகளை சரியான முறையில் சொல்லத்தெரியாது போகும் போது, இதன்காரணமாக வாஸ்து மூலம் பலன் கிடைக்காத நிலை ஏற்படும்போது, வாஸ்துவிற்கு எதிராக பேசுபவர்களுக்குத் தோதாக அமைந்துவிடுகிறது.  இதற்கு முழு காரணம் வாஸ்து சாஸ்திரத்தை சரியாக அறிந்த வல்லுனர்கள் மிக குறைவாக இருப்பதே காரணம்.  நமது நாட்டில் இரகசியம் என்ற பெயரில் அவரவர்களுக்கு தெரிந்ததை வெளிப்படையாக விவாதிக்காமல்  தனக்கு தெரிந்தவையே சரி என்றும், மற்றவர்கள் கூறுவது தவறு என்றும், ஆராய்ச்சி மனப்பன்மையில்லாமல் வாஸ்து கலை தெரிந்தவர்களுடன் விவாதித்து வெளிப்படையாக வெளிக்கொண்டு வராத காரணத்தாலும், பல நூல்கள் புரியாத மொழியில் இருப்பதாலும் அறிய பொக்கிஷமான வாஸ்து கலை, சாதாரண மனிதன் அறிந்துகொள்ளும் நிலை ஏற்படவில்லை. இதனால் புத்தகங்கள் படித்தோ அல்லது வீடு கட்டும் போது வருகிற போகிற நண்பர்கள் மற்றும், வாஸ்துவை முழுநேர தொழிலாக பார்க்காமல், வேறு வேலையில் இருந்து கொண்டு சைடு வருமானத்திற்கு வாஸ்து பார்க்கும் பகுதி நேர வாஸ்து நிபுணர்களை தவிர்த்து விடுவது மட்டுமே வீடு கட்டும் மக்களுக்கு நல்ல நேரம் என்று சொல்ல என்னால் முடியும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)