இடத்தின் பத்திரப்பதிவும் வாஸ்துவும்,

யார் பெயரில் இடம் வாங்க வேண்டும்
யார் பெயரில் இடம் வாங்க வேண்டும்

யார் பெயரில் இடம் வாங்க வேண்டும்

நாம் வாங்கும் இடம் அல்லது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் இடம் யாருடைய பெயரில் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஆக இடம் என்பது ஆண்கள் பெயரில் இருந்தால் என்ன  பயன்கள் மற்றும், பெண்கள் பெயரில் இருந்தால் என்ன நன்மை  என்பது பற்றி பார்ப்போம்.
இந்த பஞ்ச பூத சக்தியோடு இணைந்த பூமி பெண் அம்சம் ஆகும். அதானால் தான் பூமியில் உள்ள அனைத்து செடிகள் மற்றும் மரங்களும் இனப்பெருக்கம் என்ற பெயரில் காய்களையும் பழங்களையும் தருகிறது. ஆகவே பூமி  என்பது பெண் வடிவமென்றும் அவரே தாய் ஆவார். இதில் மகரந்த சேர்க்கையில் ஈடுபடக் காரணமாக உள்ள சூரியனே இந்த பூமிக்கு தந்தை ஆவார். சூரியன் ஆண் வடிவமாக இருக்கும் இரண்டு பேரும் சேரும்போதுதான் இந்த பூமியின் மீது உயிரினங்கள் பிறந்து வாழ்கிறது என்பது அறிவியல் உண்மை. அந்தவகையில் வாஸ்து அமைப்பில் ஆண்களுக்கு உரிய இடமென்றும் பெண்ணுகளுக்கு உரிய இடமென்றும் இரண்டு வகைகள் உண்டு. அதை தெரிந்து வாங்குவதே மிக நல்லது.

1200px-Cammenga-lensatic-compass-model-27-370x297
1200px-Cammenga-lensatic-compass

கிழக்கு  மேற்கு சாலைகள் உள்ள மனைகள் அனைத்துமே ஆண்கள் பெயரில் வாங்குவது மிக நல்லது. ஒரு வீட்டில் இரண்டாவது மற்றும் நான்காவது வாரிசு ஆண் குழந்தையாக இருந்தால் சகல ஐஸ்வர்யத்தையும் தரவல்லது. அவர்களுக்கு கிழக்கு மற்றும் மேற்கு சாவைகள் உள்ள இடங்கள் சிறப்பு. இதுபோன்ற சாலை அமைப்பு இருந்தால் பெண்கள் பெயரில் வாங்குவதை தவிர்த்தல் நல்லது.  இதனால் பெண்கள்  பாதிப்பு அடையும் நிலையை அந்த இடங்கள் கொடுக்கும்.

தெற்கு மற்றும் வடக்கு சாலைகள் உள்ள இடங்கள் எப்பொழுதுமே பெண்கள் பெயரில் வாங்குவதுதான் சிறப்பு. அதுவும் முதல் மற்றும் மூன்றாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்து அந்த வீடு பெண்கள் பெயரில் இருக்கும் போது நல்ல நன்மைகளை செய்யும். 

 தெற்கு மேற்கு சாலை அமைப்புகள் உள்ள இடம் ஆண்கள் பெயரில் அமைவது மிக மிக சிறப்பு.  வடக்கு கிழக்கு சாலை உள்ள இடங்களையும் ஆண்கள் பெயரில் வாங்குவது மிகவும் நல்லது.இப்படி உள்ள இடங்களில் உள்ள ஆண்கள் மிகப்பெரிய சமூகத்தில் மிகப்பெரிய மனிதர்களாக இருப்பார்கள்.  ஆக தெற்கு மேற்கு ரோடு உள்ள இடத்தை பெண்கள் பெயரில் வாங்குவது தவறு. அதனுடைய பாதிப்பு பெண்களுக்கே இருக்கும். அதிக குடும்பங்களில் கணவன் மனைவி உறவில் பிரச்சனை  மற்றும், விபத்து சார்ந்த இறப்புக்களையும் கொடுக்கும்.
 வடக்கு மேற்கு ரோடு அமைப்பு இடத்தை பெண்கள் பெயரில் மட்டுமே இருக்க வேண்டும்.இப்படி பட்ட இடத்தில் இருப்பவர்கள் ஆண் பெண் இருவருமே மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவர்களாக இருப்பார்கள். அதிகம் கற்றுணர்ந்தவர்களாக இருப்பார்கள். மிக விசயஞானம் உடையவர்களாக இருப்பார்கள்.  நல்ல புத்தியுடையவர்களாக இருப்பார்கள்.மிகவும் பிரபலமானவர்களாக இருப்பார்கள்.வடக்கு மேற்கு உள்ள இடத்தை ஆண்கள் பெயரில் வாங்குவதால் பல பிரச்சனைகள் ஆண்களுக்கு ஏற்படும். கடன் சுமை அதிகமாகவும் நிரந்தர தொழில் தடைகளை ஏற்படுத்தும்.வீட்டை விட்டு வெளியேற கூடிய சூழ்நிலையை கொடுக்கும். பணம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சச்சரவுகள் சார்ந்த பிரச்சனையில் முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)